Wednesday 6 May 2015

மாற வேண்டிய கல்வி முறை



பொதுவா எங்களோட யூனிவெர்சிட்டில அதுவும் நாங்க சார்ந்த டிபார்ட்மென்ட்கள்ல யூ.ஜி, பி.ஜி பிள்ளைங்களுக்கு க்ளாஸ் எடுக்குறவங்க அந்தந்த ப்ரொபசர் கீழ பி.ஹச்.டி பண்ற ஸ்காலர்ஸ் தான்.

அதுவும் சீனியர் ப்ரொபசர்களோட ஸ்டுடென்ட்ஸ்னா கெத்து ஜாஸ்தி. இவங்க எம்.பில், பி.ஜி பிள்ளைங்களுக்கு க்ளாஸ் எடுப்பாங்க. ஜூனியர் ப்ரொபசர்களோட ஸ்டுடென்ட்ஸ் யூ.ஜி பசங்களுக்கு க்ளாஸ் எடுப்பாங்க.

என்னோட கைட் கொஞ்சம் சீனியர். அதனால அவருக்கு பி.ஜி பசங்களுக்கு க்ளாஸ் ஒதுக்கப்பட்டுருக்கும். போன வருஷம் வரைக்கும் நான் பி.ஜி ஸ்டுடென்ட்ஸ்க்கு தான் க்ளாஸ் எடுத்துட்டு இருந்தேன்.

இந்த வருஷம் தான் ஒரு ஜூனியர் ப்ரொபசர் மெடிக்கல் லீவ் போட்டுட்டு போக, அவங்க க்ளாஸ் அட்ஜஸ்ட் பண்றதுக்காக என்கிட்ட வந்து கேட்டாங்க.

அதெல்லாம் முடியாதுன்னு தான் நான் முதல்ல சொன்னேன், யூ.ஜி பிள்ளைங்களுக்கெல்லாம் க்ளாஸ் எடுத்தா நம்ம கெத்து என்னாகுறது? ஆனாலும் அட்லீஸ்ட் இன்னிக்கி ஒருநாளாவது போன்னு சொன்னதால தான் யூ.ஜி பிள்ளைங்களோட க்ளாஸ் போக சம்மதிச்சேன். சும்மா ஏதாவது சொல்லிட்டு வந்துடலாம்ங்குறது தான் என்னோட ப்ளான். இன்னும் ஒரு விஷயம் என்னனா நான் ரெகுலரா காலேஜ் போக மாட்டேன். பல நேரங்கள்லயும் வீட்ல இருந்தே வேலைய முடிச்சுடுவேன்.

அங்க போனதுக்கப்புறம் தான் தெரிஞ்சுது, அத்தன புள்ளைங்களும் நாம பேசுறத அத்தன ஆர்வமா கேக்குறாங்க. தயக்கமே இல்லாம கேள்விகள் கேக்குறாங்க. அவங்க கிட்ட விளையாட்டுத் தனம் இருந்தாலும் அதே ஆர்வம் கத்துக்குறதுலயும் இருக்கு. ஆண், பெண்ங்குற பேதம் இல்லாம ஒரு சமமான சோசியல் மூவ் இருக்கு அவங்ககிட்ட.

அவங்ககிட்ட நான் முதல்ல க்ளாஸ் எடுத்தப்ப தமிழ்ல பேச ரொம்ப தடுமாறுனேன். நிறைய வார்த்தைகளுக்கு தமிழ்ல என்னன்னு எனக்கு புரியாம ஒரு மாதிரி அபிநயம் பிடிச்சி நான் பேசினத வச்சே அவங்க தமிழ் பெயர கண்டுபிடிச்சு சொன்னாங்க. உண்மைய சொன்னா முதல் நாள் நான் அவங்களுக்கு ஆசான் இல்ல, அவங்க தான் எனக்கு ஆசானா இருந்தாங்க. நிறைய தமிழ் வார்த்தைகள் கத்துக்கிட்டேன். அத வச்சே ஆங்கிலத்த அவங்களுக்கு புரிய வச்சேன்.

எப்படி, மனுஷன், விலங்கு, பறவை, மீனினம்ன்னு வேறுபாடுகள் இருக்கோ அப்படித் தான் கண்ணுக்கு தெரியாத நுண்ணுயிர்களுக்கும் (இந்த வார்த்தைய அவங்க கிட்ட இருந்து கத்துக்குறதுக்குள்ள நான் தடுமாறிட்டேன்) பேக்டீரியா, வைரஸ், பங்கை, ப்ரோடோசோவா அப்படின்னு வேறுபாடுகள் இருக்கு. நாம மனுசங்களுக்கு எப்படி பெயர் வச்சு கூப்டுறோமோ அப்படி தான் அதுகளையும் ஒவ்வொரு பேரு வச்சு கூப்பிடுறோம். என்ன ஒண்ணு, எப்படி ஜப்பான் நாட்டுல உள்ளவங்க பெயர் நமக்கு புரியாதோ அப்படி தான் இந்த பெயர்களும் அவ்வளவு ஈசியா வாய்ல நுழையாது. அதுக்காக படிக்காம அப்படியே விட்டுற முடியுமா? அதுக்கு ஒரு வழி இருக்கு.

பேக்டீரியாவுல “ப்டெல்லோவிப்ரியோ”ன்னு ஒரு இனம் இருக்கு. பெயரை கேட்டாலே என்னவோ மாதிரி இருக்குல, இது என்ன பண்ணும்னா வேற பேக்டீரியாக்கள புடிச்சி சாப்ட்டுடும். அந்த அளவு சேட்டைக்கார பேக்டீரியா அது. உங்கள்ல யாரு ரொம்ப சேட்டைப் பண்ணுவான்னு கேட்டேன்.

அவங்க ஒரு பையன கை காட்டினாங்க. இவன் தான் எங்க சாப்பாட்ட எல்லாம் இண்டர்வல் நேரம் எடுத்து சாப்ட்ருவான் மேடம்ன்னு.

சூப்பர், இனி அவனுக்கு “ப்டெல்லோவிப்ரியோ”ன்னு பெயர் வச்சிடுங்க. அதோட இந்த “ப்டெல்லோவிப்ரியோ” க்ராம் நெகடிவ் வகைய சார்ந்தது, அதான் சேட்டை பண்ணுதுல, அப்ப நெகடிவ்ன்னு மனசுல பதிய வச்சுக்கோங்க. இதால ஆக்சிஜன் இல்லாம வாழ முடியாது, அதனால அத “ஒப்ளிகேட் ஏரோப்”ன்னு சொல்றோம், அதால வேற பேக்டீரியாக்கள சாப்டாம இருக்க முடியாதுல, அப்படி தான் ஆக்சிஜன் இல்லாமலும் வாழ முடியாதுன்னு சொன்னேன்.

அப்புறமா அந்த க்ளாஸ்ல பல பேருக்கு பேக்டீரியாவோட பெயர் தான். அதோட குணநலன்கள அனுசரிச்சு ஒவ்வொரு பிள்ளைக்கும் ஒவ்வொரு நாமகரணம். அதுக்கப்புறம் நான் க்ளாஸ் போறேனோ இல்லையோ அந்த மேடத்த வர சொல்லுங்கன்னு அவங்களே என்னை சிபாரிசு பண்றாங்க.

இந்த புள்ளைங்க ஆர்வத்த பாக்குறப்ப ரெகுலரா போகலனாலும் நம்மால முடிஞ்ச அளவு அவங்களுக்கு க்ளாஸ் எடுக்கப் போகணும்னு முடிவு பண்ணி வச்சிட்டு தான் அப்பப்ப நானே ஆர்வமா அவங்க க்ளாஸ்க்கு ஓடுறேன்.

உண்மைய சொன்னா, ஏனோ தானோன்னு இருக்குற மேற்படிப்பு படிக்குற பிள்ளைங்களுக்கு அடித்தளம் படிக்குற இந்த புள்ளைங்க எவ்வளவோ மேல். கெத்தாவது மண்ணாவது... அட்லீஸ்ட் கத்துக்கணும்ங்குற ஆர்வமும், புது விசயங்கள தெரிஞ்சிக்கணும்ங்குற ஆர்வத்தையும் நாம ஊட்டிட்டா போதும், இந்த பிள்ளைங்களோட பேஸ்மென்ட் நல்லா இருந்தா, இதே பிள்ளைங்க மேற்படிப்பு படிக்கும் போது சிறந்த மாணவர்களா வருவாங்களே. அந்த பேஸ்மென்ட் சரியில்லாம தான் பி.ஜி படிக்குற பிள்ளைங்க வெறும் புத்தகப் புழுவாவும், சுயமா சிந்திச்சு ஒரு ரிசெர்ச் பண்ற முடியாமலும் இருக்காங்க.

ஏதோ மத்தவங்களுக்கு சொல்லிக் குடுக்குற அளவுக்கு எனக்கு சில விஷயங்கள் தெரியுதுனா என்னோட பேஸ்மென்ட் அப்படி. கேள்வி மேல கேள்வி கேட்டு நான் அத்தன படுத்தியும் பொறுமையா எல்லா கேள்விக்கும் பதில் சொல்லித் தந்தாங்களே அவங்களால தான் நான் இன்னிக்கி ஓரளவு என்னோட துறை சார்ந்த விஷயங்கள்ல ஆர்வமா இருக்கேன், இன்னும் கத்துக்குறேன்.

உச்சாணிக் கொம்புல இருந்துகிட்டு நான் மேல ஏறி வந்துட்டேன்னு சொல்றது வாழ்க்கை இல்ல, ஒவ்வொரு புள்ளைங்களா மேல ஏத்தி விட்டுட்டு, எப்பாவாவது வழியில பாக்குறப்ப எங்க மேடம்னு ஓடி வந்து கைப்புடிப்பாங்க பாத்தீங்களா, அது தான் வாழ்க்கை. ஸ்கூல் டீச்சரா போலாம்னா, அது பத்தி எதுவும் தெரியாது, ஆனாலும் எனக்கு இப்ப பேஸ்மென்ட் வாழ்க்கை ரொம்ப பிடிச்சிருக்கு. அடுத்த வருஷம் வாய்ப்பு கிடச்சா முழு நேர யூ.ஜி ஸ்டாபா மாறிடணும்.

ஏணி ஏறுறதுக்கு மட்டுமில்ல, இறங்கி வந்து கைகுடுத்து தூக்கி விடுறதுக்கும் தான்.




.

12 comments:

  1. Ungal padivn moolam enium pali, kaluri asirari ninikau vaithutega. yaru aarvama nadatharagala antha paadam pidikum athulathan mark athikama varum athanala ouvaru varadamum paadam maari konda irukum. ungalidam en kelvi darvin kotpadu nega naparegala thagalin karuthu solavum. st

    ReplyDelete
    Replies
    1. டார்வின் கோட்பாடுனா என்னதுன்னு இனி தான் நான் படிக்கணும். படிச்சுட்டு வந்து தனியா போஸ்ட் போடுறேனே... ஹஹா.... நிஜமாவே கோட்பாடுனா என்னன்னு கொஞ்சம் திணறிட்டேன். நானே இப்ப தான் கொஞ்சம் கொஞ்சமா தமிழ் வார்த்தைகள் கத்துகிட்டு வரேன்.

      டார்வின் கோட்பாடுல எனக்கு உடன்பாடு உண்டு. மாற்றம் மட்டுமே மாறாதது இல்லையா... அதே மாதிரி "சர்வைவல் ஆப் தி பிட்டஸ்ட்" (இதோட தமிழாக்கம் இன்னும் சரியா எனக்கு தெரியல) மேல அபார நம்பிக்கை...

      Delete
    2. darvin kotpadu padikanum nu solarega aana napikai irukunu solarega.//// இல்லல, அது நான் வேடிக்கையா சொன்னது.

      maatrm matun maarathu oru eduthu katu soluga/// அத தனியா ஒரு பதிவாவே போடுறேன், நேரம் கிடைக்கும் போது

      Delete
  2. Bdellovibrio? How should one correctly pronounce this term anyway? I always thought it is harder to teach the beginners than "higher level" students. I believe it is easy to learn any subject these days as the internet source is available for everyone especially one is not lucky enough to get a "good teacher" like you. :-) There are more sophisticated books available these days which are far better than the old ones. If one wants to learn he/she can learn from several sources and discussion forums unlike older "book days"! Good to know you have a passion for teaching, GD. Let me be an on-line student for you. But I can't pay you for your on-line lessons, GD. :-)

    ReplyDelete
    Replies
    1. Bdellovibrio தான். ஆனா தமிழ்ல எல்லாம் எப்படி சொல்லிக் குடுக்க முடியும், எப்படி எழுதனும்னு தெரியல எனக்கு. இப்பலாம் "higher level" students மக்காவே தான் இருக்காங்க. எல்லாரும் வெறும் புக் வார்ம்ஸ். அத தாண்டி ஒரு வார்த்தை வெளில இருந்து கேட்டா சொல்லத் தெரியாது. சுய சிந்தனை இல்லவே இல்ல. ஆனா இந்த யூ.ஜி பிள்ளைங்க அப்படி இல்ல. அவங்களுக்கு சொல்லிக் குடுக்க ஒரு பிளாட்பார்ம் இல்லங்குறது தான் உண்மை. இன்னொன்னு, சொந்தமா புக் வச்சுக்க கூட முடியாத பிள்ளைங்க, இன்டர்நெட் னா என்னமோ பெரிய அதிசயம்னு பாக்குற பிள்ளைங்க அவங்க. அவங்க எப்படி ஆன்லைன்ல புக்ஸ் தேட முடியும்? இங்கிலீஷ் பேசிக்கே தெரியாது, அவங்க எப்படி அத்தனை பெரிய புக்ஸ் படிப்பாங்க..... அவங்களுக்கு கத்துக் குடுக்குற விதத்துல கத்துக் குடுக்காம நான் ஸ்டாண்டர்ட் ன்னு சொல்லிட்டு திரியுறதுல என்னத்த சாதிச்சுடப் போறோம்?

      Delete
    2. I always get lost when it comes to India and "technology" sources. Everyone has a cell phone and they chat online and share in whatsup and, do all nonsense online. The major advantage of internet, smart phone and IT is that you can easily educate yourself from all online sources. When it comes to education, people will start complaining about the lack of resources and being poor and all. Then how could they afford a cell phone and to waste their time in FB/whatsup? Beats me.

      Anyway, I am sorry that I was ignorant about the limited sources available for the students because of lack of financial resources or language skills or whatsoever. BTW, I would not "stereotype" all PG students are such and such and UG students are such and such.

      Delete
    3. நீங்க சொன்ன வரைமுறைக்குள் நான் வந்துடுறேன், காரணம் என்னோட தேடல் எல்லாமே அதிகமா ஆன்லைன்ல தான். ஆனாலும் என்னோட பேசிக் education என்னோட டீச்சர்ஸ், லெக்சரர்ஸ் விதைச்சது.... ஹை-க்வாலிட்டி education எனக்கு கிடச்சுது. அதனால நானும் கூட உங்க பார்வைல தான் ரொம்ப நாள் இருந்தேன். ஆனா இன்னமும் வளர்ச்சி அடையாத கிராமங்கள் இருக்கத் தான் செய்யுது. ஹை-க்வாலிட்டி education-லயும் புக் வார்ம்ஸ் நிறைய பேர் இருக்காங்க....

      இன்னொன்னு, இங்கிலீஷ் தெரியாம, basic education-னும் இல்லாம இருக்குற பசங்க கைல இன்டர்நெட் கிடச்சா அவங்களுக்கு கண்டிப்பா ஆக்கப்பூர்வமா அத பயன்படுத்தத் தெரியாது. கெட்டு சீரழியத் தான் செய்வாங்க....

      basic நாம சரியா சொல்லிக் குடுத்துட்டா, இந்த குப்பை சோ கால்ட் இன்டர்நெட்-ல இருந்து தேவையான மாணிக்கத்த அவங்களே பொறுக்கிப்பாங்க. இத தான் நான் சொல்ல வந்தேன்.

      இன்னொன்னு, நான் என்னை சூழ்ந்த, என்னை சார்ந்த மாணவர்கள பத்தி மட்டும் தான் பேசிட்டு இருக்கேன். எனக்கு தெரியாதவங்கள நான் எப்பவுமே ஜட்ஜ் பண்ணவும் மாட்டேன், அதுக்கான உரிமையும் எனக்கு இல்ல.

      Delete
    4. Everyone has a cell phone and they chat online and share in whatsup and, do all nonsense online.//// நீங்க உங்கள சுற்றி உள்ளவங்கள விமர்சிக்குறீங்க, நான் என்னை சுற்றி உள்ளவர்களோட தேவைகள சொல்றேன், அவ்வளவு தான்

      Delete
    5. என்னைக் கேட்டால் நம்மை சுற்றி உள்ளது மட்டுமே உலகம்ன்னும் நாம பாக்குறது மட்டும் தான் உலக நிகழ்வுகள்ன்னும் நினச்சுட்டு இருக்குறத நாம மாத்தப் பாக்கணும். குறைகள் சொல்ல நிறைய பேர் இருப்பாங்க, அத நிவர்த்தி பண்ண என்ன செய்யலாம்னு யோசிச்சு செயல்படுத்துரவங்க குறைவு. நான் அந்த குறைவானவங்க லிஸ்ட்-ல இருக்க விரும்புறேன்

      Delete
    6. ***Everyone has a cell phone and they chat online and share in whatsup and, do all nonsense online.//// நீங்க உங்கள சுற்றி உள்ளவங்கள விமர்சிக்குறீங்க, நான் என்னை சுற்றி உள்ளவர்களோட தேவைகள சொல்றேன், அவ்வளவு தான்.***
      The fact is my relatives who live in India spend more time in whatsup and facebook than myself and people around me.

      Delete
    7. ***என்னைக் கேட்டால் நம்மை சுற்றி உள்ளது மட்டுமே உலகம்ன்னும் நாம பாக்குறது மட்டும் தான் உலக நிகழ்வுகள்ன்னும் நினச்சுட்டு இருக்குறத நாம மாத்தப் பாக்கணும்.***

      We only know our world. We do not know how others' world look like either. But we think/imagine that the others' world would look like "this"! We are very wrong most of the time!

      Delete
  3. நல்ல அணுகுமுறையுடன் கூடிய பாடம்...

    பாராட்டுக்கள்...

    ReplyDelete