Monday, 14 October 2013

இது ஒரு நட்பின் கதை....


சின்ன வயசுல இருந்தே என்கிட்ட ஒரு பழக்கம்... எனக்கு தோணுற விசயம் தான் சரினு ஆர்க்யூ பண்ணுவேன், அதுலயும் அப்பா என்ன சொன்னாலும் அது சரியில்லனு சண்ட போடுவேன்... அப்பா எங்கயாவது போககூடாதுனு சொன்னா அங்க தான் போவேன்னு அடம் பிடிப்பேன்...
ஆனா அப்புறமா அமைதியா ரூம்ல போய் உக்காந்துருவேன்... அப்பாவுக்கே தெரியும் அவர் பேச்சு மீறி நான் எதுவும் செய்ய மாட்டேனு... இப்படி தான் ப்ரெண்ட்ஸ் எதாவது ஹெல்ப் கேட்டா மாட்டேன்னு சொல்லிடுவேன். அப்புறமா மாங்கு மாங்குனு அவங்க வேலய தான் முதல்ல முடிச்சு குடுப்பேன். என்னோட இந்த கேரக்டர புரிஞ்சுட்டு இப்போலாம் ப்ரெண்ட்ஸ் என்கிட்ட வேலய சொல்லிட்டு போயிட்டே இருப்பாங்க. எப்படியும் நான் செய்து குடுப்பேன்ங்குற நம்பிக்கையில நான் முடியாதுன்னு சொன்னாலும் கண்டுக்க மாட்டாங்க...

நான் அப்போ எம்.பில் பண்ணிட்டு இருந்த நேரம். இன்னும் கொஞ்ச நாள்ல ப்ராஜக்ட் சப்மிட் பண்ணியே ஆக வேண்டிய கட்டாயம். திடீர்னு உடம்பு சரியில்லாம போய் ஹாஸ்பிட்டல்ல அட்மிட் ஆகி இருந்தேன். என்னோட வொர்க் புல்லா நான் என் லேப்டாப்ல தான் ஸ்டோர் பண்ணி வச்சிருந்தேன். அத ஹாஸ்பிட்டல்க்கு தூக்கிட்டு வந்து அங்க வச்சு என்னோட தீசிஸ் எழுதிட்டு இருந்தேன். உடம்பு வேற முடியலையா, ரொம்ப பலஹீனமா இருந்ததால திடீர்னு மடில இருந்து லேப் டாப் கீழ விழுந்து உடைஞ்சுடுச்சு.

ஏற்கனவே அப்பா ப்ராஜெக்ட் எல்லாம் அப்புறமா பாத்துக்கலாம், இப்போ உன்னோட ஹெல்த் தான் முக்கியம்ன்னு சொல்லிட்டார். லேப் டாப் வேற உடைஞ்சு போச்சு. அடுத்து உடனே பி.ஹச்.டி ஜாயின் பண்ணனும்ங்குற ஆசைய நான் போஸ்ட் பான்ட் பண்ணியே ஆக வேண்டிய கட்டாயம். சரி, விதி வலியதுன்னு மனச தேத்திக்கிட்டு அப்படியே ரெண்டு நாள் இருந்தேன்.

அடுத்த நாள், ஹாஸ்பிடல்ல குடுத்த கஞ்சிய குடிச்சுட்டு மறுபடியும் என்ன பண்ணலாம்னு யோசிச்சுட்டு இருந்தேன். அப்போ திடீர்னு ஒரு கால்.... டிஸ்ப்ளேல நண்பன் ஒருத்தன் பேரு... அட்டெண்ட் பண்ணி ஹாய்டானு சொன்னேன்... உன் மெயில் செக் பண்ணு... அந்த டேட்டா எல்லாம் graphஆ போட்டுக்குடுத்துடுனு­­ சொல்லிட்டு கட் பண்ணிட்டான்... திருப்பி கால் பண்ணினா மொபைல் சுவிட்ச் ஆப்... “டேய்... என் கிட்ட லேப் டாப் இல்லடா...”ன்னு அங்க இருந்தே கத்த தான் முடிஞ்சுது.

அப்படியே மூணு நாள் ஓடி போச்சு. நான் மெயில் எதுவும் அவனுக்கு அனுப்பல, அனுப்பவும் முடியாதே.... அவன் நம்பருக்கு ரெண்டு மூணு தடவ ட்ரை பண்ணி பாத்துட்டு கடுப்புல அத மறந்தும் போயிருந்தேன். அப்போ தான் காலைல திடீர்னு மறுபடி கால் பண்ணினான், எல்லாம் ரெடியானு கேட்டு. “ஏண்டா டேய், நீ கால் பண்ணுனியே என்னை பேச விட்டியா? நானே இந்த வருஷம் எல்லாம் போச்சுன்னு உக்காந்துட்டு இருக்கேன், நீ ஹாயா மூணு நாளு மொபைல ஆப் பண்ணி வச்சுட்டு கடுப்பேத்துற, வேற யார் கிட்டயாவது குடுத்து முடி, இல்லனா நீயே முடிச்சு சப்மிட் பண்ணு”னு வந்த கடுப்புல நல்லா திட்டி விட்டுட்டேன்.

சாயங்காலம் நாலு மணிக்கு மறுபடியும் அவன் கிட்ட இருந்து கால், மேடம், உங்க அப்பாயின்மென்ட் வேணும், உள்ள விட மாட்டேங்குறாங்கனு..... அங்க ஹாஸ்பிடல் ரொம்ப ஸ்ட்ரிக்ட். டோக்கன் இல்லாம யாரையும் உள்ள விட மாட்டாங்க. அதனால மறுபடியும் ஒரு நாலு மணி நேரம் காத்திருந்து அப்பா வந்ததுக்கப்புறம் மெதுவா ரூம் உள்ள வந்தான்.... கையில ஒரு லேப் டாப்.... பக்கி, மரியாதையா graph போட்டு குடுன்னு மிரட்டல் வேற... சிரிச்சுகிட்டே வேற வழி இல்லாம அவன் கிட்ட இருந்து லேப் டாப்ப வாங்கிட்டு, மெயில் அனுப்பி வைக்குறேன்னு சொல்லி அவன அனுப்பி வச்சேன்..

இந்த பசங்கள புரிஞ்சுக்கவே முடியாதுங்க... பசங்கள பொறுத்தவரை அவங்களுக்கு ஹெல்ப் பண்ண எவ்வளவோ கேர்ள்ஸ் இருப்பாங்க, அசைமென்ட், ரெக்கார்ட், ப்ராஜட் இதெல்லாம் எழுதி குடுக்க... அப்படி யாராவது ஹெல்ப் பண்ண முடியலனா அந்த பசங்க வேற பொண்ணு கிட்ட ஹெல்ப் கேட்டுட்டு போய்ட்டே இருப்பாங்க....ஆனா இந்த பக்கி என் கிட்ட ஹெல்ப் கேட்டான், நான் முடியாதுன்னு சொன்னேன், காரணம் என் கிட்ட லேப்-டாப் இல்ல அப்போ.... அவன் என்ன செய்திருக்கணும், வேற யார்கிட்டயாவது ஹெல்ப் கேட்டுருக்கணும், அத விட்டுட்டு 90 Km ட்ராவல் பண்ணி, நாலு மணி நேரம் என்னை பாக்க பெர்மிஷன் கிடைக்காம காத்து கிடந்து, அப்புறமா அவன் லேப் டாப் கொண்டு வந்து குடுத்து முடிச்சு குடுன்னு சொல்றான்..

அன்னிக்கி நைட் தூங்காம முழிச்சு இருந்து, அவன் கேட்டத மெயில் பண்ணிட்டேன்.... மறுநாள் வந்து லேப்-டாப் வாங்கிட்டு போடான்னு கால் பண்ணி சொன்னேன். அதுக்கு அவன், அது எனக்காக கொண்டு வரல, உனக்காக தானு சொன்னான். ஆமா, அது எனக்கு ரொம்ப அவசியமா இருந்துது அப்போ... என்னோட படிப்ப பொருத்தவர என்ன தடங்கல் வந்தாலும் போராடி போராடி ஒவ்வொரு வருசமும் அடுத்த ஸ்டெப் அடுத்த ஸ்டெப்ன்னு போய்ட்டே இருந்தேன். ஆனா இப்போ எந்த உதவியும் இல்லாம, ஒரு வருஷம் பிரேக் விழுந்தே ஆகணும்னு வந்த கட்டாய சூழ்நில என்னை ரொம்பவே கஷ்டபடுத்திட்டு இருந்துச்சு. அப்போ தான் இவன் வந்தான்.

ரெண்டு நாளா தூங்காம, delete ஆன என்னோட ரிப்போர்ட்ஸ் எல்லாம் மறுபடி ரெடி பண்ணினேன். ரிபோர்ட் வைக்க வேண்டிய கடைசி நாள்ல அப்பா கிட்ட குடுத்து விட்டு எப்படியோ சப்மிட் பண்ணிட்டேன்.... அப்புறமா தான் நிம்மதியா தூங்கினேன்.

மறுநாள் அவனுக்கு காலைல போன் பண்ணி தேங்க்ஸ்டா னு சொன்னேன், அதுக்கு அவன் ஒரு தேங்க்ஸ் பத்தாது, 100 டைம்ஸ் தேங்க்ஸ் சொல்லுனு சொல்லி ராகிங் பண்ணான்... அவன எல்லாம் ஏன் சுனாமி தூக்கல?

அப்புறமா ஹாஸ்பிடல்ல இருந்து டிஸ்சார்ஜ் ஆகி, வைவா அட்டென்ட் பண்ணி, ஒரு வழியா எம்.பில் முடிச்சு இப்போ பி.ஹைச்.டி ஜாயின் பண்ணியாச்சு. எனக்கு ஹெல்ப் பண்ணின நண்பனும் இப்போ பி.ஹச்.டி பண்றதுக்காக ஹைட்ராபாத் போயிட்டான்.

நமக்கு எப்பவுமே நல்ல பிரெண்ட்ஸ் கிடச்சுட்டா போதுங்க, என்ன வேணா சாதிக்கலாம். அன்னிக்கி உடம்பு சரியில்லாம இருக்கா, அவள டிஸ்டர்ப் பண்ண கூடாதுன்னு நினச்சிருந்தா இன்னிக்கி நான் படிச்சுட்டு இருந்துருக்க மாட்டேன். என்னால முடியும்னு அவன் நம்பினான். என் மேல ஒரு பாரத்த தூக்கி போட்டு என்னையும் அடுத்த நிலைக்கு தூக்கி விட்டுட்டான். அந்த பக்கி நம்பர் கூட மாத்திட்டான் போல, கொஞ்ச நாளா ஆள் காணோம். என்னிக்காவது ஒரு நாள் கண்டிப்பா கூப்டுவான், அப்போ இருக்கு அவனுக்கு... 

17 comments:

 1. ஹப்பா... அந்த நண்பனுக்குத்தான் எத்தனை நம்பிக்கை உங்க மேல..! நீங்களும் விட்றாம போராடி இரவுக்கிரவே பணணிக் குடுத்தது கிரேட்! மத்தவங்களுக்கு உதவி செய்யறதாலதான் உங்களுக்கு டைம்ல லேப்டாப் கிடைச்சு தீஸிஸ் லாஸ்ட் டேட்ல அப்பா மூலமா சப்மிட் பண்ண முடிஞ்சிருக்குன்னு தோணுது. தொடர்ந்து எதிலும் வெற்றி மேல் வெற்றிகள் குவிக்க என் நல்வாழ்த்துகள்!

  ReplyDelete
  Replies
  1. ஆமா, எப்பவுமே என்னோட ப்ரெண்ட்ஸ் எனக்கு பக்கபலமா இருந்த்ருக்காங்க... வாழ்த்துக்கு தேங்க்ஸ் :)

   Delete
 2. நண்பன் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும்... அந்த நண்பர் எங்கிருந்தால் வாழ்க...

  ReplyDelete
  Replies
  1. தேங்க்ஸ் அண்ணா, அவன் எங்க இருந்தாலும் நல்லா இருக்கணும்... ஹஹா இந்த வாழ்த்து நல்லா இருக்கே

   Delete
 3. வணக்கம்

  பதிவு நன்றாக அமைந்துள்ளது இப்படி நண்பன் கிடைதமைக்கு கடவுளை வணங்க வேண்டும் பதிவு அருமை வாழ்த்துக்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. ஹஹா அவன்னு இல்ல, என்னோட ப்ரெண்ட்ஸ் எல்லோருமே கிட்டத்தட்ட இப்படி பட்ட கேரக்டர்ஸ் தான்

   Delete
 4. வணக்கம்
  கொஞ்ச நாளா ஆள் காணோம். என்னிக்காவது ஒரு நாள் கண்டிப்பா கூப்டுவான், அப்போ இருக்கு அவனுக்கு... ...

  நீங்கள் கொடுக்கப் போகும் தண்டனைதான் என்ன அதைவைத்து மீதி தொடரலாம்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. அப்படி என்ன தண்டனை குடுத்துட போறேன், நாலு திட்டு திட்டுவேன், அப்புறம் கரியர் பத்தி பேச ஆரம்பிச்சுடுவோம்...

   Delete
 5. எல்லாம் சரி அந்த நன்பனை "பக்கி" நு சொல்லிட்டியே அதான் எனக்கு குறைய படுது. வாழ்த்துக்கள். கருணாகரன்

  ReplyDelete
  Replies
  1. அது பிரண்ட்ஸ்குள்ள கேசுவலா யூஸ் பண்ற வார்த்த தானே... வாழ்த்துக்கு தேங்க்ஸ்

   Delete
 6. நமக்கு எப்பவுமே நல்ல பிரெண்ட்ஸ் கிடச்சுட்டா போதுங்க, என்ன வேணா சாதிக்கலாம்.

  மிகச்சரியாக சொன்னீங்க. எல்லோருக்கும் இப்படி நல்ல நண்பர்கள் வாய்ப்பது இல்லை.

  ReplyDelete
  Replies
  1. ஆமா, அந்த வகைல நான் லக்கி

   Delete
 7. ninga vetrikaramaka phd yum mudikka valthukkal. aduthu unga friend oda e-mail id theriyum illaiya mail send pani parunga..

  ReplyDelete
  Replies
  1. மெயில் பண்ணனும் மகேஷ்... இன்னும் கொஞ்சநாள் கழிச்சு பண்ணுவேன்

   Delete
 8. உங்கள் உதவும் தன்மை. அந்த தன்மைதான் உங்கள் நண்பரை இப்படி செய்ய வைத்திருக்கிறது.

  ReplyDelete
 9. எல்லாம் ஓகே.. ஆனா, சந்தடி சாக்குல நீ எம்- பில் பண்ணிட்டேன்.. p.hd பண்ணிட்டு இருக்கேன்னு சைடு-ல ஒரு குட்டி கதை சொல்லுறதை தான் நம்ப முடியவில்லை காயு..

  ReplyDelete