Thursday, 31 October 2013

உன்னை பற்றியழ வந்துவிடு...

காற்றை கிழித்து
பெருங்கூச்சலாய் புறப்படுகிறது
உள்ளிருந்து ஓர் ஆங்காரம்...

பாறைகள் தாவி,
உச்சி வெயில் காய்கிறது மனம்...

இதுவரை யாதென்றே அறிந்திராத
இருவருக்குமான இடைவெளிகள்,
இன்று திசை திருப்பி கொள்கின்றன...

மோதிய வேகத்தில்
உடைந்து சிதறுகிறது
திருஷ்டியென எறியப்பட்ட பூசணிக்காய்...
கூடவே துடித்தழுகிறது பிய்த்தெறியப்பட்ட இதயம்...

இதுவரையில் உன்னோடான பயணத்தில்-
தாய்க் கண்டு பாய்ந்தோடும்
சிசுவின் பரவசம் எப்பொழுதும்
உன்னிடத்தில் நான் அடைந்ததுண்டு...

உன் தோள் தாவி,
கழுத்தில் நான் பதிக்கும் முத்தம்
காமத்தில் சாயலை கண்டதேயில்லை...

நீ போகும் திசையெல்லாம்
வளையோசை குலுங்க
குதித்தோடி பழகியவள் நான்...

என் பாதக்கொலுசுகளின்
சிணுங்கள் ஒலி மீறி எதிரொலிக்கும்
உன்னை கெஞ்சும் என் கொஞ்சல் மொழி...

முறைக்கும் உன் கண்கள் கண்டு
நகைக்கவும் நான் தயங்கியதில்லை...
அடுத்த கணம் வலிய பற்றியிழுத்து
அணைக்கப்போவது உன் கரங்கள் தானே...

ஆனாலும்- இன்றென்னை
வெறுத்திட்டதாய் வார்த்தை கனலை
விசிறி எறிந்தாய்...
அவை என் குருதிக்குள் புகுந்தென்னை
வேக வைக்கும் என்றறிந்தும்...

என் நரம்புக்குள் ஏதோ
ஊர்ந்துச் செல்கிறது...
இயலாமை- கட்டுப்பாடு மீறி
வெளிக் குதித்தோடுகிறது...

என் இருகரங்களும்
உன் தலைமயிர் தேடித் தவிக்கின்றன...
நீயின்றி எனக்கு
பைத்தியம் பிடித்ததாய் பற்றியழ வேண்டும்...
அதற்காகவாவது உன் தலை கொடுத்து விட்டுப் போ...

20 comments:

 1. வணக்கம்
  கவிதை மிகச் சிறப்பு வாழ்த்துக்கள்
  இனியதீபாவளி வாழ்த்துக்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. தேங்க்ஸ்.... கவிதைய பாராட்டினதுக்கும், தீபாவளி வாழ்த்து சொன்னதுக்கும்

   Delete
 2. முடிவில் ஆழ்ந்த வரிகள் கதற வைத்தது...

  இனிய தீபத் திருநாள் நல்வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 3. erkanave intha kavithai padicha mathiri irukku akka.. analum paravala mil pathivaka irukkattum nalla irukku.. ama tamilakaththil eppo dipavali kondaduringa. nalaikka naalannaikka

  ReplyDelete
  Replies
  1. ஆமா மகேஷ், நான் தான் தெரியாத்தனமா ரெண்டு தடவ போஸ்ட் பண்ணியிருக்கேன். இங்கயும் நல்ல ரெஸ்பான்ஸ் இருந்ததால மறுபதிவு label ஒட்டி விட்டுட்டேன்

   Delete
 4. அவை என் குருதிக்குள் புகுந்தென்னை
  வேக வைக்கும் என்றறிந்தும்...

  என் நரம்புக்குள் ஏதோ
  ஊர்ந்துச் செல்கிறது...
  இயலாமை- கட்டுப்பாடு மீறி
  வெளிக் குதித்தோடுகிறது..
  வரிகள் நன்றாக உள்ளன

  ReplyDelete
  Replies
  1. ம்ம்ம்ம் தேங்க்ஸ்

   Delete
 5. ரசித்த்து கொண்டே பிளஸ் +1 மொய் வைத்தேன்;
  மறு மொய் எனக்கு வைக்கவேண்டும் என்று உங்களுக்கு சொல்லவும் வேண்டுமா என்ன?

  ReplyDelete
  Replies
  1. நானும் அப்பவே மொய் வச்சுட்டேன்.... :)

   Delete
 6. உன் தோள் தாவி,
  கழுத்தில் நான் பதிக்கும் முத்தம்
  காமத்தில் சாயலை கண்டதேயில்லை...
  >>
  காமமில்லா அன்பு கிடைக்க கொட்த்து வச்சிருக்கானும்

  ReplyDelete
  Replies
  1. ஆமா, கண்டிப்பா கொடுத்துவச்சிருக்கணும்

   Delete
 7. சிறப்பான படைப்பு! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. தேங்க்ஸ் அண்ணா உங்க வாழ்த்துக்கு

   Delete
 8. நல்லாருக்குங்க கவிதை...
  ஒரு சின்ன டெக்னிக்கல் அட்வைஸ்...உங்களது வலைப்பூவின் பேக்ரவுண்ட், டெம்ப்ளேட் நிறைய நிறங்களாக இருப்பதால் பார்ப்பதற்கு கொஞ்சம் உறுத்தலாக இருக்கிறது. முடிந்தால் கொஞ்சம் சிம்பிள் ஆக மாற்றுங்கள் வலைப்பக்கத்தை!

  #தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.. இது எனது கருத்து மட்டுமே!

  ReplyDelete
  Replies
  1. உங்க பாராட்டுக்கு தேங்க்ஸ்

   அப்புறம், நீங்க சொல்ற அளவு நிறைய நிறங்கள் எல்லாம் இல்லையே, ரொம்ப சிம்பிளா தான் இருக்கு, இன்னொரு விஷயம், இது நான் ரசிச்சு ரசிச்சு டிசைன் பண்ணினது. நாம ரசிச்ச விசயத்த யாருக்காகவும் மாத்திக்க கூடாதுங்குறது என் பாலிசி

   Delete
 9. தீபாவளி நல் வாழ்த்துக்கள்.
  வலைச் சரத்திலே நீங்கள் போட்டிருந்த குட்டி ராதைக்கும்
  எனது வாழ்த்துக்களை ஆசிகளை சொல்லி விடுங்கள். ப்ளீஸ்

  சுப்பு தாத்தா.
  subbuthatha72.blogspot.com

  ReplyDelete
  Replies
  1. தேங்க்ஸ் தாத்தா.... கண்டிப்பா சொல்லிடுறேன் :)

   Delete
 10. ஐய்யய்யோ, கொஞ்சம் விட்டா தலை கொய்து பக்கத்தில் வைத்துக் கொள்வீர்கள் போல் உள்ளது

  ReplyDelete
  Replies
  1. ஹஹா அப்படி எல்லாம் இல்ல... இது வேற மாதிரி தலை கேக்குறது

   Delete