Wednesday 9 October 2013

ரொம்ப அழாதீங்க.... மூணே மூணு தத்துவம் தான்...


அரைகுறையா ஒரு முழிப்பு, அங்க இங்க போற காலடி சத்தங்கள் ஒரு பக்கம், அடுப்படியில பாத்திரம் உருளுற சத்தம் ஒரு பக்கம், விசிலடிக்குற குக்கர் ஒரு பக்கம், மூக்கை துளைக்குற கடுகு வாசனை ஒரு பக்கம், இப்படி எல்லாமா சேர்ந்து மெய் மறந்து தலயனையை கட்டிக்கிட்டு இன்னும் கொஞ்ச நேரம் தூங்கினா அட, அட, அட..... நல்லா தான் இருக்கும்..... ஆனாலும் கடமைன்னு ஒண்ணு இருக்கே... எப்படியும் எழுந்து தான் ஆகணும்....


அப்புறம், நான் வேற தத்துவம் சொல்லி ரொம்ப நாள் ஆகிடுச்சு, அதனால. தான் அரக்க பறக்க எழுந்ததுக்கு தத்துவம் சொல்லிட்டு போகலாம்னு வந்தேன்.  முன்னாடி நான் சொன்ன தத்துவத்த படிக்காதவங்க போய் இங்க படிச்சுட்டு வாங்க...

முதல்ல காலை வணக்கம்
........................................................

நட்பு அப்படீங்குற பந்தம் மட்டும் இந்த உலகத்துல யாருக்குமே தோணாம போயிருந்தா இந்த அன்பு, பாசம், நேசம் இதெல்லாம் ஒண்ணுமேயில்லாம போயிருக்கும். நல்ல நட்பு எப்பவுமே எல்லோருக்கும் அவசியம். அதுக்காக நமக்காக அவங்க எல்லாமே செய்யணும்னு நினைக்குறது நம்மோட சுயநலம். ஸோ சுயநலம் களைந்து எதிர்பார்ப்பே இல்லாத தூய நட்போட ஒரு இனிய காலை வணக்கத்தை வச்சிக்குவோம்....

காலை வணக்கத்த கூட ஒரு தத்துவத்தோட சொல்லியாச்சு, சரி சரி, போய் வேலைய பாருன்னு நீங்க சொன்னா, அதெப்படிங்க நான் கேப்பேன். மறுபடியும் தத்துவம் சொல்லியே ஆவேன்னு அடம் பிடிக்க தான் செய்வேன். அதனால உக்காந்து என் தத்துவத்த கேட்டுட்டு போங்க...

அப்படி என்ன சாதிச்சுட்டோம் நாம?
....................................................................................

அப்படியே ஒரு நாளு வேலைக்கோ இல்ல காலேஜுக்கோ போயிட்டு வந்து, அசந்து போய் சோபால சாஞ்சு உக்காரும் போது, இதுவரைக்கும் நாம அப்படி என்னத்த சாதிச்சுட்டோம்னு யோசிச்சு பாத்துருக்கீங்களா? ஆமான்னு சொல்றவங்களுக்காக தான் இந்த தத்துவம்... கொஞ்சம் கண்ண நல்லா கூர்மையாக்கிட்டு படிங்க...

மனுசனா பொறந்தா எல்லோருக்கும் ஆசைகள் இருக்கும். ஆனா அந்த ஆசைகள ஆசைகளா மட்டுமே வச்சுக்காம, அதை நிறைவேத்துற வழிய கண்டிப்பா நாம யோசிச்சு, அத செயல் படுத்தவும் வேணும். ஒவ்வொருத்தரும் நமக்கு நாமே, அப்படி என்ன சாதிச்சுட்டோம் நாமன்னு யோசிக்குறப்போ கிடைக்குற பதில் நம்ம மனசுக்கு நிறைவா இருந்துட்டா மட்டும் போதுங்க, அப்புறம் வேற என்ன வேணும் வாழ்க்கைல?

ஆ.... ஊன்னா கோபம் வருதோ?
............................................................................
யாரையாவது தூக்கி போட்டு மிதிக்கணும் போல இருக்கா? கன்னா பின்னான்னு பிரஷர் தலை மேல ஏறுதா? அந்த நேரம் ஏதாவது உங்களுக்கு பண்ணனும்னு தோணுதா? கொஞ்சம் இத படிச்சுட்டு அப்புறம் முடிவு எடுங்களேன்.

என்னதான் இருந்தாலும், அப்படி இப்படி எப்படி எல்லாமோ மனசுக்குள்ள குழப்பமா இருந்தாலும், சட்டு புட்டுனு வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டுங்குற மாதிரி உடனே முடிவு எடுத்துட கூடாது. அந்த நேரம் உணர்ச்சிகளுக்கு அடிமையாகாம நின்னு நிதானமா அறிவுக்கு வேலை குடுத்து முடிவெடுக்கணும்... அப்படி முடிவெடுக்க முடியலையா, அந்த முடிவுகள கொஞ்ச நேரத்துக்கு தள்ளி போட்டுருங்க... மனசு ரிலாக்ஸ் ஆகிட்டா அப்புறம் தெளிவான முடிவு மூளை வழியா நம்ம கண்ணு முன்னால டான்னு வந்து நிக்கும்.

மனசுல பகையை வச்சுட்டு நாம என்ன பண்ண போறோம்?
.................................................................................................................

இப்போ நான் சொன்னது தெளிவா புரியணும்னா நாலு வாட்டி படிக்கணும்..... படிச்சுட்டு அப்படியே பாலோ பண்ணனும்...

இந்த பகை உணர்ச்சியையும் வன்மத்தையும் மனசுக்குள்ள எப்போ நாம குடியேற அனுமதிக்குறோமோ அப்பவே நம்மள நாம அதுங்க கிட்ட அடகு வச்சுடுறோம். பொருள் எதையாவது அடகு வச்சா மீட்டுடலாம், ஆனா நம்மள அடகு வச்சுட்டோம்னா மீட்டுக்கவே முடியாது. இதுல பரிதாபம் என்னனா, நாம நம்மோட வாழ்க்கைய இழந்துட்டு இருக்குறோம்ங்குறத நாம உணருறதே இல்ல. இத படிச்ச உடனே நாம என்ன மகாத்மாவா, இதெல்லாம் இல்லாம நாம வாழ்றதுக்குனு சட்டுன்னு நமக்குள்ள ஒரு கேள்வி எழும். கண்டிப்பா இல்ல தான், ஆனா அப்படி வர உணர்ச்சிகள அடுத்த நொடி நம்மள விட்டு துரத்த பழகிப்போம். நம்மள சுத்தி எவ்வளவோ அழகியல் இருக்கு. வாழலாமே அழகா........

அதென்ன மூணே மூணு தத்துவம்னு சொல்லிட்டு நாலஞ்சு பிட்டு போடுறன்னு கேட்டீங்கனா, நாங்க எப்பொங்க சொல் பேச்சு கேட்டுருக்கோம்... அதுவா எதையாவது எடுத்து விட வேண்டியது தான்...

அதான் அழகா வாழ்வோம்னு சொல்லிட்டேன்ல, யாரையாவது உங்களுக்கு காரணமே இல்லாம பிடிக்காதா? போங்க போங்க, போய் அவங்களுக்கு ஒரு ஹாய் சொல்லுங்க, அந்த நேரம் அவங்க மனசு ஒரு குழம்பு குழம்பி, அப்புறமா உங்கள திரும்பி திரும்பி பாத்துட்டு போவாங்க பாருங்க, அப்போ அவங்க ரொம்ப அழகா தெரிவாங்க... நீங்களும் அவங்க அழக ரசிச்சுகிட்டே ஜாலியா ஒரு பாட்ட முணுமுணுத்துட்டே போய் வேலைய பாருங்க...

நான் நாளைக்கு வேற ஒரு பதிவோட உங்கள மீட் பண்றேன். இப்போதைக்கு அன்பான பை பை... டாட்டா.....

12 comments:

 1. #இப்போ நான் சொன்னது தெளிவா புரியணும்னா நாலு வாட்டி படிக்கணும்..... படிச்சுட்டு அப்படியே பாலோ பண்ணனும்... #
  பாலோவர் ஆகவே ஆயிட்டேன் !
  தொடர்கிறேன் ,தொடருங்கள் !
  த.ம.2

  ReplyDelete
  Replies
  1. நன்றி, அப்படியே தொடர்ந்து வாங்க, வந்து படிச்சுட்டு கமண்ட்டும் போட்டுட்டு போங்க

   Delete
 2. நீங்க எப்ப இருந்து இப்படி ஆனிங்க

  ReplyDelete
  Replies
  1. முதல்ல நீங்க எப்போ இருந்து இப்படி ஆனீங்க.... மூணு தடவ போஸ்ட் பண்ணியிருக்கீங்க

   Delete
 3. நீங்க எப்ப இருந்து இப்படி ஆனிங்க

  ReplyDelete
 4. நீங்க எப்ப இருந்து இப்படி ஆனிங்க

  ReplyDelete
 5. நல்ல தத்துவங்கள்! நன்றி!

  ReplyDelete
  Replies
  1. நன்றி மட்டும் சொன்னா போதாது, அப்படியே பாலோ பண்ணனும்

   Delete
 6. பெரீய தத்துவங்கள் அனைத்தும் நன்றாக இருந்தது.
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete