Tuesday 1 October 2013

உன்னை பற்றியழ வந்துவிடு...


காற்றை கிழித்து
பெருங்கூச்சலாய் புறப்படுகிறது
உள்ளிருந்து ஓர் ஆங்காரம்...


பாறைகள் தாவி,
உச்சி வெயில் காய்கிறது மனம்...

இதுவரை யாதென்றே அறிந்திராத
இருவருக்குமான இடைவெளிகள்,
இன்று திசை திருப்பி கொள்கின்றன...

மோதிய வேகத்தில்
உடைந்து சிதறுகிறது
திருஷ்டியென எறியப்பட்ட பூசணிக்காய்...
கூடவே துடித்தழுகிறது பிய்த்தெறியப்பட்ட இதயம்...

இதுவரையில் உன்னோடான பயணத்தில்-
தாய்க் கண்டு பாய்ந்தோடும்
சிசுவின் பரவசம் எப்பொழுதும்
உன்னிடத்தில் நான் அடைந்ததுண்டு...

உன் தோள் தாவி,
கழுத்தில் நான் பதிக்கும் முத்தம்
காமத்தில் சாயலை கண்டதேயில்லை...

நீ போகும் திசையெல்லாம்
வளையோசை குலுங்க
குதித்தோடி பழகியவள் நான்...

என் பாதக்கொலுசுகளின்
சிணுங்கள் ஒலி மீறி எதிரொலிக்கும்
உன்னை கெஞ்சும் என் கொஞ்சல் மொழி...

முறைக்கும் உன் கண்கள் கண்டு
நகைக்கவும் நான் தயங்கியதில்லை...
அடுத்த கணம் வலிய பற்றியிழுத்து
அணைக்கப்போவது உன் கரங்கள் தானே...

ஆனாலும்- இன்றென்னை
வெறுத்திட்டதாய் வார்த்தை கனலை
விசிறி எறிந்தாய்...
அவை என் குருதிக்குள் புகுந்தென்னை
வேக வைக்கும் என்றறிந்தும்...

என் நரம்புக்குள் ஏதோ
ஊர்ந்துச் செல்கிறது...
இயலாமை- கட்டுப்பாடு மீறி
வெளிக் குதித்தோடுகிறது...

என் இருகரங்களும்
உன் தலைமயிர் தேடித் தவிக்கின்றன...
நீயின்றி எனக்கு
பைத்தியம் பிடித்ததாய் பற்றியழ வேண்டும்...
அதற்காகவாவது உன் தலை கொடுத்து விட்டுப் போ...

26 comments:

 1. அருமை... ரசித்தேன்...

  வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. தேங்க்ஸ் அண்ணா... எல்லாம் உங்க ஆசிர்வாதம்

   Delete
 2. நன்னா இருக்கு. சந்திப் பிழைகளில் கவனம் செலுத்துக!

  ReplyDelete
  Replies
  1. பிழைகள்னு தெரிஞ்சா கண்டிப்பா திருத்திப்பேன். அதிகமா தமிழ் படிச்சதில்ல நான். நீங்க கொஞ்சம் சுட்டி காட்டுங்களேன் தப்பு எங்கன்னு

   Delete
  2. //காற்றை கிழித்து
   பெருங்கூச்சலாய் புறப்படுகிறது //

   காற்றைக் கிழித்து ப்
   பெருங்கூச்சலாய்ப் புறப்படுகிறது

   Delete
  3. //இன்று திசை திருப்பி கொள்கின்றன..///
   இன்று திசை திருப்பிக் கொள்கின்றன..

   Delete
  4. //தாய்க் கண்டு பாய்ந்தோடும்///

   தாய் கண்டு பாய்ந்தோடும்

   Delete
  5. //குதித்தோடி பழகியவள் நான்.//

   குதித்தோடிப் பழகியவள் நான்.

   Delete
  6. அம்மணி.
   நேரமிருந்தா இதக் கொஞ்சம் படிச்சுப் பாக்கவும்.
   http://tamilmennoolgal.wordpress.com/2011/08/13/%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AF%A7%E0%AE%A3%E0%AE%AE/


   அல்லது

   http://filesflash.com/swwgswuj

   Delete
 3. //அதற்காகவாவது உன் தலை கொடுத்து விட்டுப் போ.//

  கொஞ்சம் டெர்ரர்ரா முடிச்சிருக்கீங்க, அருமை..

  ReplyDelete
  Replies
  1. அவ்வ்வ்வ் அது டெர்ரர் இல்ல, பாவம் தலைமுடி பிடிச்சுட்டு அழ தான் தலை கேட்டது

   Delete
 4. Replies
  1. அவ்வ்வ்வ் என்னோட மிரட்டலுக்கு பயந்து கமன்ட் போட்ட மாதிரியே இருக்கு, இருந்தாலும் இந்த பக்கம் எட்டி பாத்ததுக்கு ரொம்ப தாங்க்ஸ்

   Delete
 5. அன்பின் ஆக்ரோசம் வெளிப்பட்டது இறுதியில்.. தலை தப்பியது.

  ReplyDelete
  Replies
  1. ம்ம்ம்ம் தேங்க்ஸ்... தலைய தப்பிக்க விட கூடாது அவ்வளவு சீக்கிரம் :)

   Delete
 6. அழகிய கவிதை. . . .தொடர்ந்து கலக்குங்கள். . .

  ReplyDelete
 7. aha enna solurathuku irukku ungaloda kavithai pathi therinjathutana. thodarungal akka..

  ReplyDelete
  Replies
  1. தேங்க்ஸ் மகேஷ்.. உனக்கு புரிஞ்சுதுனா எனக்கு சந்தோசம்

   Delete
 8. நல்ல கவிதை...

  //நீ போகும் திசையெல்லாம்
  வளையோசை குலுங்க
  குதித்தோடி பழகியவள் நான்... //

  இந்த வரிகளை மிகவும் ரசித்தேன்...

  ReplyDelete
  Replies
  1. ம்ம்ம்ம் தேங்க்ஸ்... இன்னும் நிறைய கவிதைகள் இருக்கு.. அப்பப்போ படிச்சு பாருங்க...

   Delete
 9. என் தளம் உட்பட மற்ற தளங்களுக்கு ஓட்டளியுங்கள்... இது உங்களுக்கு மேலும் மேலும் வாசகர்கள் எண்ணிக்கை கூடும்...

  ஏற்கனவே மெயிலில் சொல்லி உள்ளேன்... நன்றி...

  நண்பர்களின் வேண்டுகோளுக்கினங்க இந்த கருத்துரை...

  புரிதலுக்கு நன்றி...

  ReplyDelete
 10. நான் நேரம் கிடைக்குறப்போ எனக்கு கண்ணுல விழுற போஸ்ட்க்கு கமன்ட் போடுறேன் அண்ணா.... ஆனாலும் இப்போ தான் கொஞ்சம் கொஞ்சமா பழகிக்குறேன், நண்பர்கள் அவங்க போஸ்ட் தெரிய நான் என்ன செய்யணும்னு சொன்னா அப்படியே கண்டிப்பா செய்றேன். சிலர் போஸ்ட்க்கு கமன்ட் பண்ண முடியுறதில்ல, சில போஸ்ட் என்னோட அறிவுக்கு அப்பாற்பட்டதா இருக்கு, ஓட்டு போடுறது மாதிரி லிங்க் இருந்தா கட்டாயம் ஓட்டு போடுறேன்... சுட்டிகாட்டினதுக்கு நன்றி அண்ணா... நண்பர்களின் லிங்க்ஸ் எனக்கு பரிந்துரை செய்யுங்களேன்

  ReplyDelete
 11. மிக்க நன்றி..

  ReplyDelete