Wednesday, 23 October 2013

நான் வால்பொண்ணு இல்லீங்கோ.... ரொம்ப சமத்து


ஒரு நாளு, நல்லா தூங்கிகிட்டு இருந்தேன்.... திடீர்னு அம்மா “போர்த்திட்டு தூங்குறத பாரு, ஒரு பொறுப்பு வேணாம், ஒரு அக்கற வேணாம், நான் ஒருத்தி இருக்குறதால தான இப்படி எல்லாம் இருக்குற, எப்போ உனக்கு புத்தி வர போகுது... ஊரு ஒலகத்துல புள்ளைங்களும் இருக்காங்களே, ஒன்ன மாதிரியா இருக்குதுங்க, எவ்வளவு காலைலயே எழுந்து வேலைய பாக்குதுங்க... அட எரும மாடே இன்னுமா தூங்கிட்டு இருக்க, ஒன்ன சொல்லி தப்பில்ல... ஒன்ன செல்லம் குடுத்து வளத்தேன் பாரு என் தப்பு”
–னு திட்டிட்டே மூஞ்சியில பளிச்னு தண்ணி தெளிச்ச மாதிரி இருந்துச்சு. அப்படியே சிலிர்த்துகிட்டு பாக்குறேன், யாருமே இல்ல... அது ஒரு கனவு... ஆமா, கனவா தான் இருக்க முடியும். ஏன்னா என் அம்மா என்னை இப்படி எல்லாம் திட்டினதே இல்ல....

அப்போலாம் நான் ரொம்ப வாலு. அம்மாவ நிம்மதியா ஒரு இடத்துல இருக்கவே விட மாட்டேன். கருப்பட்டி காப்பி போட்டு தரேன்னு அம்மா குடிக்குறதுக்கு பிடிச்சு வச்சிருக்குற தண்ணியில மாட்டுக்கு ஊற வச்சு அரச்சு வச்சிருக்குற புளியங்கொட்டைய கலக்கி விட்டுருவேன். என் புள்ளை காப்பி போட்டுருக்கா பாருங்கன்னு எல்லார்கிட்டயும் அம்மா அத எடுத்துட்டு போய் காட்டுவாங்க.

வீட்டுக்கு தெரியாதவங்க யார் தேடி வந்தாலும் வாசல்ல போய் நின்னுக்கிட்டு யார் நீங்க, உங்களுக்கு என்ன வேணும்? எதுக்கு இங்க வந்துருக்கீங்க? என்ன விசயமா வந்துருக்கீங்க, எங்க இருந்து வந்துருக்கீங்கன்னு கேள்வி மேல கேள்வி கேட்டு, அவங்க சொல்ற பதில் எனக்கு திருப்தியா இருந்தா மட்டும் தான் கதவை திறந்து விடுவேன். வந்தவங்க முக்கால்வாசி பேருக்கு எரிச்சல் வந்தாலும், எம்பொண்ணு தான் எங்க வீட்டு எஜமானி, அவள கேக்காம யாரும் உள்ள வர முடியாதுன்னு அவங்க கிட்டயே என்னை மடில தூக்கி வச்சுட்டு பெருமையா சொல்லுவாங்க.

மாட்டுக்கு வைக்குற தேங்கா புண்ணாக்கு எனக்கு ரொம்ப பிடிக்கும். அத மாட்டு தீவனம் அடச்சு வச்சிருக்குற ரூம்க்குள்ள போய் கை நிறைய அள்ளிட்டு, அந்த ரூம்ல இருட்டுக்குள்ளயே வச்சு மொக்கு மொக்குன்னு மொக்குவேன். என்னோட அப்பம்மா வந்து கண்டுபுடிச்சி, புண்ணாக்கு திங்குற அளவுக்கா எம்புள்ள ஒனக்கு கொற வச்சிருக்கான், எப்பேர்பட்ட வம்சத்துல பொறந்துட்டு இது புண்ணாக்கு திங்குதேன்னு கத்தி கச்சேரி வைக்கும் போது, அம்மா, என்னை தூக்கி இடுப்புல வச்சுட்டே, புள்ள இருட்டுல கூட பயமே இல்லாம தைரியமா உக்காந்துட்டு இருக்கு, அத பாராட்டாம விட்டுட்டு இப்படி பாடுறீங்களேன்னு சொல்லிட்டே ரூம்க்குள்ள போய்டுவாங்க. அங்க போய் அம்மா கைய விரிச்சு காட்டினா, அதுல நாலஞ்சு பீஸ் தேங்கா புண்ணாக்கு இருக்கும்.

அம்மாவுக்கு செடி வளக்குரதுனா ரொம்ப பிடிக்கும். யார் கிட்டயாவது கஷ்டப்பட்டு ரோஜா கம்பு எல்லாம் வாங்கி வந்து, பாத்தி மாதிரி கட்டி, அதுல வரப்பு மேல நட்டு வச்சிருப்பாங்க. செடிக்கு தண்ணி போகாம, கீழ வீணா போகுதுன்னு, வரப்ப எல்லாம் தோண்டி போட்ருவேன். ரோஜா செடி வேர் விட்ருக்கான்னு பாக்க அத புடுங்கி வேற பாப்பேன். அதோட விட்டா பரவாலயே, புடுங்குன செடிய தலைகீழா நட்டு வச்சுடுவேன். என் அம்மா பாத்துட்டு என்ன சொல்லியிருப்பாங்கன்னு நினைக்குறீங்க? எம்புள்ள பெரிய விஞ்ஞானியா வருவான்னு சொல்லுவாங்க தெரியுமா? அப்பவே என்னோட அம்மா நான் ஒரு வருங்கால விஞ்ஞானின்னு சரியா கணிச்சுருக்காங்க.... அம்மா ஈஸ் கிரேட்.

இதெல்லாம் நான் அஞ்சு வயசுல இருக்குறப்போ நடந்தது. நான்லாம் அப்பவே அப்படி... இப்போ கேக்கவா வேணும்???

இப்போ மட்டும் என்ன? நீ சின்ன புள்ள இல்லையாக்கும்ன்னு கேக்குரவங்களுக்காக மட்டும்..
.....................................................................................................................

இப்போலாம் நான் ரொம்ப அறிவுப்பூர்வமா சிந்திக்க ஆரம்பிச்சுட்டேங்க... நீங்க நம்பலனா நான் எப்படி எல்லாம் சிந்திச்சிருக்கேன்னு நீங்களே படிச்சு தெரிஞ்சுக்கோங்க...

1. கொக்குக்கு வெள்ளை பெயின்ட் அடிச்சது யாரு?

2. காக்கா கறுப்பா இருக்கே, அது கருங்கடல்லயா குளிக்கும்?

3. குயிலுக்கு சளி பிடிச்சு தொண்டை கட்டிக்குமா?

4. தட்டான் பூச்சியோட கண்ணாடி சிறகுல முகம் பாக்கலாமா?

5. பொன்வண்டு சுமார் எத்தனை கேரட் இருக்கும்?

6. வேகமா ஓடுற முயல் ஸ்பீட் ப்ரேக்கர்ல மோதி மண்டைய உடச்சுக்குமா?

7. தவளைக்கு கழுத்து இல்லையே, அத எப்படி கட்டி போடுறது?

8. பச்ச தண்ணி ஏன் பச்சையா இல்ல?

9. பஞ்சாயத்துல அந்த பழைய சொம்ப மாத்திட்டாங்களா?

10. நாட்டாம கொண்டைக்குள்ள அப்படி என்ன தான் இருக்கு?


இனிமேல் யாராவது என்னைய பாத்து நீ புத்திசாலியா-ன்னு கேட்டீங்க, அப்புறம், நான் உங்கள கேள்வியா கேட்டு கொன்னேபுடுவேன்.... வர்ட்டா.....

28 comments:

 1. சிறந்த கவிஞரா
  தலை சிறந்த பதிவரா
  நீங்க நிட்சயம் வருவீங்க்கன்னு
  உங்க அற்புதமான சிந்தனையும்
  சொல்லிச் செல்லும் அழகும் சொல்லுது
  எனது அட்வான்ஸ் நல்வாழ்த்துக்கள்
  மனம் கவர்ந்த பதிவிற்கும் தொடரவும்
  நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. உங்க வாழ்த்து எனக்கு ஒரு உற்சாக டானிக் மாதிரி இருக்கு. ரொம்ப தேங்க்ஸ்

   Delete
 2. Replies
  1. ஓட்டு போட்டதுக்கு தேங்க்ஸ் :)

   Delete
 3. அடடா... ரசிக்க வைக்கும் சிந்தனைகள்... எப்படிங்க இப்படி எல்லாம்...? பாராட்டுக்கள்... சிறு வயதில் எவ்வளவு குறும்பு (வாலு) என்று புரிகிறது.... வாழ்த்துக்கள்....

  ReplyDelete
  Replies
  1. சிந்தனைன்னு சொல்லி என்னை இப்படி சிந்திக்க வச்சுட்டீங்களே... அப்படி என்ன சிந்தனை சொன்னேன்னு.... அவ்வ்வவ்வ்

   Delete
 4. பாவம்ங்க உங்க அம்மா....!!!
  இருந்தாலும் அனுபவங்களை நியாபகம் வெச்சு அழகாக தொகுத்திருந்தது ரசிக்கும்படி இருந்தது...

  ReplyDelete
  Replies
  1. ஹஹா இதெல்லாம் வெறும் ட்ரைலர் கூட இல்ல... ஜுஜுபி.... அப்புறமா ஒரு நாளு இன்னும் கொஞ்சம் சொல்றேன்

   Delete
 5. உங்கம்மா பாவம். ஆனா, தேங்காய் புண்ணாக்கு நல்லா இருக்கும்ல!?

  ReplyDelete
  Replies
  1. அம்மா பாவம் எல்லாம் இல்ல, என்னை என் போக்குல விட்டு அப்படியே வளத்துட்டாங்க..... தேங்கா புண்ணாக்கு சூப்பர் டேஸ்ட் :)

   Delete
 6. ahaha intha pathiva padikkum pothu kutti gayathri paapaa niyapakathukku vara... ana lost la ninga ketta kelviya padichu ninga nesamalume puthisalithan othukkurom akka..

  ReplyDelete
  Replies
  1. ஹஹா மகேஷ், நீ நான் புத்திசாலின்னு ஒத்துக்கிட்டியே அது போதும் அவ்வவ்வ்வ்வ்

   Delete
 7. ரொம்ப அருமையா மொக்கை போடறீங்க! பிரபல பதிவரா வர வாய்ப்பு இருக்கு விட்டுடாதீங்க!

  ReplyDelete
  Replies
  1. அவ்வ்வவ்வ்வவ்வ்வ் தேங்க்ஸ்

   Delete
 8. etha padcha aparam than theriyathu epadi ellam kondaka mandaka kelvi kekallam nu !! very nyc script writing

  ReplyDelete
 9. நீங்க சமத்து தான் ஒத்துக்குறோம்... அதுக்கு ஏன் நாட்டாம கொண்டைய இழுக்குறீங்க.. பவம் அவரே சொம்ப தூக்கிட்டு ஒரு ஓரமா தீர்ப்பு சொல்லிட்டு இருக்காரு :-))))))

  ReplyDelete
  Replies
  1. என்ன இருந்தாலும் மக்களுக்கு உண்மைய விளக்கி சொல்ல வேண்டியது நம்ம கடமை இல்லையா

   Delete
 10. உங்களோட மலரும் நினைவுகள் இனிமை.... நீங்க அறிவாளிதான் ஒத்துக்கறோம்... விட்டுடுங்க....:)

  ReplyDelete
  Replies
  1. ஹஹா அப்படி எல்லாம் அவ்வளவு ஈசியா விட முடியாது, அடிக்கடி வரேன்னு வாக்கு குடுத்தா வேணா இப்போ பெயில்ல விடலாம்

   Delete
 11. சோக்கா சிந்திக்கிறேமா...

  ReplyDelete
 12. இப்பவும் தேங்கா புண்ணாக்கு புடிக்குமா? ஆனா கிடைக்காதே இப்பலாம் என்ன பண்ணுவீங்க ? பழைய நினைவுகளை பதிவு செய்துள்ள விதம் அருமை.

  ReplyDelete
  Replies
  1. இப்பவும் தேங்கா புண்ணாக்கு கிடைக்க தான் செய்யுது, ஆனாலும் பழைய டேஸ்ட் இப்போ இருக்காது

   Delete