Wednesday, 30 October 2013

பெண்ணீயத்துக்கு ஆண்பால் என்ன?எல்லோரும் பெண்ணீயம் பெண்ணீயம்னு என்னவோ சொல்லிட்டு இருக்காங்க, இதெல்லாம் கேட்டுட்டு நாம சும்மா இருந்தா இந்த சமூகம் நம்மள தப்பா நினைக்காதா?

சமூகம் என்ன நினச்சா நமக்கென்ன, நாம நம்ம வழியே போவோம்னு தான் நேத்து காலைல வரைக்கும் நினச்சுட்டு இருந்தேன். வெரி குட், அப்போ அது வரைக்கும் நல்லா தானே இருந்துருக்க, திடீர்னு எப்படி இப்படின்னு கேக்குறவங்களுக்காக நான் இத சொல்ல போறேன்.

எனக்கெல்லாம் விடியுதோ விடியலயோ, கண்ண தொறந்த உடனே, கை ஆட்டோமேட்டிக்கா மொபைல் எடுத்து பேஸ் புக்க தான் பாக்கும். இந்த வியாதிக்கு மருந்தே கிடையாதுன்னு எங்க பேமிலி டாக்டர் வேற கைய விரிச்சுட்டார். அவர விடுங்க, பாவம், அவரே அந்த வியாதில தான் இருக்காராம். நாம விசயத்துக்கு வருவோம். காலைல அப்படி பேஸ் புக் ஓப்பன் பண்ண ட்ரை பண்ணினா, அது திஸ் அக்கௌன்ட் ஈஸ் கரண்ட்லி நாட் அவைலபிள்னு வருது. எப்படி இருந்துருக்கும் எனக்கு. நீங்களே கொஞ்சம் யோசிச்சு பாருங்க.

அப்படியே பீலிங்க்ஸ்ல கொஞ்ச நேரம் இடிஞ்சி போய் இருந்தாலும் கடமை நமக்கு முக்கியம் இல்லையா? அதனால அரக்க பறக்க அடுப்புல இட்லி வேக வச்சு, நேத்தே வச்ச சாம்பார சூடு பண்ணிட்டு, அப்பாவுக்கு ரெண்டு பிரட் டோஸ்ட் பண்ணி குடுத்துட்டு, சட சடன்னு கிளம்பி காலேஜ் வந்தேன்.

காலேஜ் வாசல மிதிக்குற வர நல்லா தான் இருந்தேன். திடீர்னு ஒருத்தன் எங்க இருந்து தான் வந்தானோ, அப்படியே என்னை க்ராஸ் பண்ணி போறான். ஹையையோ, அவன் இடுப்புல இருந்து பேன்ட் நழுவி கீழ விழுதோன்னு ஒரு நிமிஷம் பதறிட்டேன். என்னோட காலேஜ் ஸ்டுடென்ட் தான். வயசு எப்படியும் இருபதுக்குள்ள தான் இருக்கும். படுபாவி, இப்படி போறானேன்னு தலைய உலுப்பிட்டு சுயநினைவுக்கு வந்தப்போ தான் இதெல்லாம் ஏற்கனவே பாக்குறது தானே, இப்போ மட்டும் ஏன் ஷாக் ஆகுறன்னு என் மனசாட்சி என்கிட்டயே கேள்வி கேட்டுச்சு.

ஆமாங்க, பொண்ணுங்களோட டிரஸ் விசயத்த பத்தி பேச நிறைய பேர் இருக்காங்க, இந்த பசங்களோட டிரஸ் சென்ஸ் பத்தி யாராவது ஒருத்தங்க சொல்ல வேண்டாமா?

எனக்கு தெரிஞ்சு பசங்க இந்த மாதிரி பேன்ட் போடுறது ஒரு வருசமா தான் நடக்குது. முதல் முதல்ல ஒரு பையன் அப்படி டிரஸ் போட்டுட்டு வந்தப்போ எங்க யூனிவேர்சிட்டி ஸ்டாப் ஒருத்தங்க அவன கூப்ட்டு கண்டிச்சாங்க. அதுக்கு அவன், இது தான் மேடம் இப்போ பேசன், நான் இப்படி தான் பேன்ட் தச்சிருக்கேன்னு சொல்லிட்டு போயிட்டான். அந்த பையன பாத்த பொம்பள புள்ளைங்க எல்லாம் அவன பரிதாபமா பாத்துட்டு, ஒண்ணுமே சொல்ல முடியாம தள்ளி போய், பிரெண்ட்ஸ் கிட்ட சொல்லி கொல்லுனு சிரிச்சப்போ எல்லாம் நான் கடுப்புல அவன நாலு அறை விடலாமான்னு யோசிச்சுருக்கேன். அப்புறமா இன்னும் நிறைய பசங்க அத பாலோ பண்ண, அதெல்லாம் சகஜம்ங்குற லெவெலுக்கு மாறி போச்சு. நான் அப்புறம் அந்த மாதிரி பசங்கள பாக்கும் போதெல்லாம் வித்யாசமா தோணுறதில்ல. நேத்து காலைல தான் மறுபடியும், பையன் டிரஸ் கழண்டுடுமோனு பயந்துட்டேன்.

அப்புறமா, மதியம் சாப்ட்டுட்டு கொஞ்சம் வெளில வேடிக்க பாத்துட்டு இருந்தேன். அதே பையன் கிராஸ் பண்ணி போறான். டாய்... கொஞ்சம் இங்க வான்னு கூப்ட்டேன். வந்தான். ஏண்டா, என்னடா டிரஸ் போட்டுருக்க? வீட்ல அப்பா நல்ல டிரஸ் எடுத்து தரலயான்னு கேட்டேன். உடனே அவன், மேடம், இது பேசன் மேடம், இதுக்காக நாங்க பண்ற தியாகம் எல்லாம் உங்களுக்கு தெரியாதுன்னு ஒரு பில்ட்-அப் வேற விட்டான்.

எனக்கு ஒரே ஆச்சர்யம், என்னது, தியாகமா? டிரஸ்ச தவிர வேற என்னத்தடா நீ தியாகம் பண்ணினன்னு கேட்டேன். அவன் சொன்னத கேட்டு எனக்கே பரிதாபமா போச்சு...

அவன் அப்படி என்ன சொன்னான் தெரியுமா? இந்த பேன்ட் போட ரொம்ப கஷ்டமாம். பாக்குறதுக்கு கீழ விழுற மாதிரியே இருக்குற அத கீழ விழாம இடுப்புக்கு கீழ டைட்டா பெல்ட் வச்சு கட்டுவாங்களாம். இதுனால முதுகு வலி, இடுப்பு வலின்னு வலி பின்னிடுமாம். ஒரு மாதிரி ஒரு அழுத்தத்துலயே எப்பவும் இருக்குறதோட மட்டுமில்லாம எங்க இது கழண்டு விழுந்து மானத்த வாங்கிடுமோன்னு பயத்துலயே தான் இருப்பானாம்.

அடப்பாவி, இப்படி எல்லாம் தெரிஞ்சு வச்சுக்கிட்டு, உடல்நிலை, மனநிலைன்னு உன்னோட வருங்காலத்தியே சீரழிச்சுட்டு இப்படி சொல்றியே, உன் அம்மா அப்பாவ கொஞ்சம் நினச்சு பாருடான்னு சத்தம் போட்டுட்டு போ போன்னு விரட்டி விட்டுட்டேன்.

இத பத்தி எனக்கு அவ்வளவா தெரியாது, ஆனாலும் அந்த மாதிரி பேன்ட் போடுறது பசங்க உடல்நிலைய பாதிக்கும்னு மட்டும் அவன் மூலமா தெரிஞ்சுகிட்டேன்.

இதுக்கெல்லாம் இந்த ஆணீயவாதிகள் என்ன பதில் சொல்ல போறாங்க?

22 comments:

 1. மிக நல்ல பதிவு.
  என் தமிழ்மணம் +1 வோட்டு போட்டு விட்டேன்
  நன்றி! நன்றி! நன்றி!!

  ReplyDelete
  Replies
  1. பாராட்டினதுக்கும் ஓட்டுப் போட்டதுக்கும் தேங்க்ஸ்

   Delete
 2. பொண்ணுங்களோட டிரஸ் விசயத்த பத்தி பேச நிறைய பேர் இருக்காங்க, இந்த பசங்களோட டிரஸ் சென்ஸ் பத்தி யாராவது ஒருத்தங்க சொல்ல வேண்டாமா?///

  unga kovam sari than akka. thodarungal

  ReplyDelete
  Replies
  1. தேங்க்ஸ் மகேஷ்... திடீர்னு தோணிச்சு, அதனால சொல்லிட்டேன், இன்னும் நிறைய சொல்லணும், பாக்கலாம், ஒண்ணொண்ணா சொல்லலாம்

   Delete
 3. வணக்கம்
  பெண்ணீயம் பற்றிய பதிவு அருமை வாழ்த்துக்கள்....தொடருகிறேன்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. உங்க வாழ்த்துக்கும் தொடர்தலுக்கும் நன்றி

   Delete
 4. சத்தம் மட்டும் போடாம நாலு சாத்து சாத்தியிருக்கணும்...

  ReplyDelete
  Replies
  1. அப்படி பாத்தா நிறைய பேர அப்படி சாத்த வேண்டி வரும் அண்ணா.... அவங்களா திருந்தணும், இல்ல வீட்ல அம்மா அப்பா கவனிக்கணும்

   Delete
 5. பெண்ணீயம், ஆணீயம் என்றால் அது அவர்கள் போடும் டிரஸ் குறித்த விசயம் தான் என்று எனக்கு புரிய வைத்தீர்கள்.

  நன்றி . அது சரி. அந்த கோபிநாத் நீயா நானா நிகழ்ச்சிலே பெண்ணீயத்தைப் பற்றி வாதிட்டார்களே....

  நீங்க பார்க்கலையா ?

  சுப்பு தாத்தா.
  www.subbuthatha72.blogspot.com

  ReplyDelete
  Replies
  1. அப்படி நான் சொல்ல வரல, பெரும்பாலும் எல்லோரும் பெண்ணீயம் னா டிரஸ் பத்தி மட்டும்தான்னு சொல்றாங்க, அத தான் சொல்ல வந்தேன்

   Delete
 6. ஹஹஹா.... நானும் இந்த பேன்ட் எப்போ அவுந்து விழுந்துடுமோ நு நினைப்பேன் பல நேரம் ....

  ReplyDelete
  Replies
  1. அம்மா, பொசுக்கு பொசுக்குனு பயமுறுத்துறாங்க இந்த பசங்க

   Delete
 7. ம்ம் இதுமாதிரி விசயங்களா எழுது...

  ReplyDelete
  Replies
  1. தேங்க்ஸ் அண்ணா, இப்படியும் எழுதிட்டு தானே இருக்கேன், ஆனா இப்படியே மட்டும் எழுதிட்டும் இருக்க முடியாது...

   Delete
 8. எனக்கெல்லாம் விடியுதோ விடியலயோ, கண்ண தொறந்த உடனே, கை ஆட்டோமேட்டிக்கா மொபைல் எடுத்து பேஸ் புக்க தான் பாக்கும்.
  >>
  நீங்க பரவாயில்ல. நான் பாதி ராத்திரிலயும் பார்ப்பேன்.

  ReplyDelete
  Replies
  1. ஹஹா இதெல்லாம் இனி சரி பண்ணவே முடியாதாம்... அட்ஜஸ்ட் பண்ணிட்டு போய்ட்டே இருக்கனுமாம்

   Delete
 9. aan baal

  AANAATHIKKAM

  ReplyDelete
  Replies
  1. ஆணாதிக்கத்துக்கு பெண்பால் பெண்ணாதிக்கம்... நான் கேட்டது பெண்ணீயம்

   Delete
 10. இந்த கொடுமையை எங்க போயி சொல்ல! இந்த பசங்க இப்படி இடுப்புக்கு கீழே பேண்டை இறக்கி விட்டுட்டு பண்ற ரவுசு கொஞ்சம் நஞ்சம் இல்ல! எங்க இருந்துதான் கண்டுபிடிச்சாங்களோ இந்த பேசனை! அருமையான பதிவு! ஆடை என்பது மற்றவர் கண்களை உறுத்தாத அளவு இருக்க வேண்டும் அது ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் என்பது என் தாழ்மையான கருத்து. நன்றி!

  ReplyDelete
  Replies
  1. ம்ம்ம்ம் சரியான கருத்துதான் :)

   Delete