Wednesday 16 October 2013

இது காதல் இல்லையா?

உன் கண் அசைந்தால்
நான் காற்றில் மிதப்பேன்...
உன் கைப்பிடித்தால் நான் 
நடை துறப்பேன்...
இது காதல் இல்லையா?


நான் தவிக்கின்றேன்
நீ சிரிக்கின்றாய்...
நான் நினைக்கின்றேன்
நீ சொல்கின்றாய் ...
இது காதல் இல்லையா?

படபடக்கும் தட்டான் எந்தன்
இமை உரசி பறக்கும் போது ...
உன் சீண்டல் நினைவில் வருதே...
உனக்கும் அது தெரிகிறதா?
வெண்பனி... சுடுநீர் ஆனதே....
கண்ணீரும்... இன்பம் சேர்க்கும் காரணம்...
ஏன் ஏன் ஏன்...?
உனக்கு...ஏதும் தோணலையா?

பரபரக்கும் வேலை நேரம்
அயராது நானும் சுழல...
நீ தானே காரணம் ஆனாய்...
இன்னும் ஏன் மவுனமோ?
என் சிந்தனை... நீயாய் ஆகிறாய்...
உன்னை நான்... யுகம் கடந்தும் தொடர்கிறேன்...
நீ நீ நீ ...?
இன்னும்... என்னை புரியலையா?

32 comments:

  1. வணக்கம்

    நான் தவிக்கின்றேன்
    நீ சிரிக்கின்றாய்...
    நான் நினைக்கின்றேன்
    நீ சொல்கின்றாய் ...
    இது காதல் இல்லையா

    கவிதை நன்று வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. தேங்க்ஸ்.... உங்களோட வாழ்த்துக்கு

      Delete
  2. வணக்கம்
    யார் சொன்னது? .....இதுவும் காதல்வரிதான்..... அருமை வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. உங்களுக்கு புரியுது, சமந்தபட்டவருக்கு புரியணுமே :)

      Delete
  3. ரசித்தேன்... (இவ்வளவு சொல்லியுமா புரியவில்லை...!?!

    ReplyDelete
    Replies
    1. அண்ணா, சும்மா வம்பிழுக்க... எல்லாம் தெரிஞ்சு தான் இருக்கும், ஆனா புரியாத மாதிரி நடிக்குராங்களோ என்னவோ

      Delete
  4. காதல் கவிதை அருமை
    //இன்னும்... என்னை புரியலையா?//
    அவனுக்கு புரியுது ஆனா அவன் மனைவிக்கு தெரிஞ்சா வம்பா போயிடும் என்று நினைத்து பயந்து போய் அமைதி காக்கிறான் போல. அது காதலில் விழுந்த அந்த பெண்ணுக்கு புரியவில்லை போலும்

    ReplyDelete
    Replies
    1. கல்யாணம் ஆன ஆணை காதலிப்பது தப்பு தானே, நம்ம ஹீரோயின் அந்த தப்ப பண்ண மாட்டா.... வேற ஏதாவது ரீசன் இருக்கும்

      Delete
  5. கவிதை முழுக்க காதல் இருக்கறது...

    ரசிக்ககூடிய அழகிய கவிதை

    ReplyDelete
    Replies
    1. நன்றி, பாராட்டுக்கு

      Delete
  6. இன்னும்... என்னை புரியலையா?///

    சீக்கிரம்ஆ புரிஞ்சுக்க வாழ்த்துக்கள்...

    கவிதை அருமை அக்கா.

    ReplyDelete
    Replies
    1. அதெல்லாம் அவருக்கு புரிய வச்சுடலாம் மகேஷ், உனக்கு புரிஞ்சுதுல, அது கவிதைக்கு வெற்றி... பாராட்டுக்கு தேங்க்ஸ் மகேஷ்

      Delete
  7. காதலை அருமையாக சொல்லும் வரிகள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கு தேங்க்ஸ்ங்க....

      Delete
  8. காதலாகிப்... போனதால் வந்ததோ ?

    ReplyDelete
    Replies
    1. ஆமா, இதுக்கு பெயர் தான் காதலாகி போனாலும் பெனாத்திட்டு இருக்குறது... இப்படி தான் நண்பர் ஒருத்தர் என்கிட்ட சொன்னார், அவ்வ்வ்வ்

      Delete
  9. தங்கள் தளம் இன்றைய வலைச்சரத்தில்

    http://blogintamil.blogspot.in/2013/10/blog-post_16.html

    ReplyDelete
    Replies
    1. ரொம்ப தேங்க்ஸ்ங்க என்னோட வலைச்சர அறிமுகத்துக்கு. தொடர்ந்து ஆதரவு தாங்க...

      Delete
  10. oh system ella comment panna mudiyuthu

    ReplyDelete
    Replies
    1. ஆமா, நீங்க சிஸ்டம் வந்தா ஈசியா கமன்ட் பண்ண முடியும்

      Delete
  11. Stalin Saravanan பிரியமான பெண்களின் சேலை முகத்தில் அறையும் சுகத்தை...தட்டான் படபடக்கும் வரிகளில் உணரலாம்!

    ReplyDelete
    Replies
    1. :) உங்க ரசனைக்கு நன்றி

      Delete
  12. யாரு சொன்னது காதல் இல்லன்னு, சும்மா உன்னை சீண்டி பாக்குறார்னு நினைக்குறேன்

    ReplyDelete
    Replies
    1. ஹஹா அது எனக்கும் தெரியுமே, நானும் சும்மா சீண்டி தான் பாக்குறேன் அவ்வ்வ்வ்

      Delete
  13. எழுத்துக்களில் முத்திரை பதிக்கிறாய் டா ...

    ReplyDelete
  14. உங்கள் தளத்துக்கு இது தான் என் முதல் வருகை...

    கவிதைக்கும் எனக்கும் கொஞ்சூண்டு தூரம்...

    ரசிக்கத் தெரியும் எழுதத் தான் தெரியாது :-))))))

    ReplyDelete
    Replies
    1. அடிக்கடி வாங்க, என்னோட நிறைய கவிதை படிக்கப்படாமலே இருக்கு... ஒண்ணொண்ணா பொறுமையா படிங்க...

      Delete
  15. Nan puthiya varavu
    ungal kavithai arumai @Thozhi

    ReplyDelete