Saturday 26 October 2013

அம்மா மடி தேடி ஓடுறப்போ....



இன்னிக்கி அம்மாவோட நினைவு நாள். அவ எங்கள விட்டு போய் மூணு வருஷம் ஆகிடுச்சுன்னு இன்னும் நம்ப முடியல. நானெல்லாம் அம்மா கூட ஒட்டி ஒட்டி இருந்தது ரொம்ப குறைவு. ரொம்ப சந்தோசமா இருக்குறப்போ ஓடி வந்து அம்மா கழுத்த கட்டிக்கிட்டு கன்னத்துல ஒரு முத்தம் குடுத்துட்டு மறுபடியும் ஓடிடுவேன். ஆனா தம்பி அப்படி இல்ல, அவனுக்கு தூங்கணும்னா அம்மா மடி வேணும், ராத்திரி அடுத்த ரூமுக்கு போகணும்னா அம்மா கூட போகணும், அம்மா எங்க போனாலும் முந்தானைய புடிச்சுட்டே போவான். அவனோட பாதுகாப்புன்னு அவன் நினைக்குறது அம்மாவ தான். நானே இவ்வளவு கஷ்டப்படுறேனே, அவன் அப்போ எவ்வளவு பீல் பண்ணுவான். என்னால அம்மாவ நினச்சா உடனே உடைஞ்சு போய் அழ முடியுது, ஆனா அப்பாவும் தம்பியும் என்ன பண்ணுவாங்க?

அம்மா போனப்போ நான் அவ்வளவா அழல, திடீர்னு புடிச்சு கிணத்துல தள்ளி விட்டா ஒரு ஷாக் இருக்குமே, அப்படி இருந்துச்சு எனக்கு. அப்புறம், போக போக பழகிட்டேன்.


நேத்து அம்மா நியாபகம் ரொம்ப வந்துடுச்சு, என் அம்மா நியாபகம் என்னை ராத்திரி தூங்க விடுமான்னு புலம்பிட்டே இருந்தேன். அதுக்கு கார்த்திக் எனக்கு சொன்ன ஆறுதல் இது....

அவர் எனக்கு குடுத்த சந்தோசம், ஆறுதல், கண்ணீர், உற்சாகம் எல்லாத்தையும் உங்க கூடவும் பகிர்ந்துக்கணும்னு ஒரு பேராசை. இந்த வார்த்தைகள் முழுசா எனக்கே சொந்தம்ங்குறதால இத இங்க போஸ்ட் பண்ண எனக்கு முழு உரிமையும் இருக்கு. அதனால அவர் என்ன சொன்னார்ன்னு நீங்களும் படிங்க....

கார்த்திக் சொன்னது
........................................................

“இந்த பூமி உருவாகியதென்னமோ மண்ணும் மரங்களும் மலைப்பிண்டங்களிலாலும் தான்... ஆனால் வாழும்மிவ் வுயிர்களை எல்லாம் கட்டிஎழுப்பி அரவணைத்து உறவு பூண்டு உயிர் வளர்த்ததெல்லாம் அன்பும் அரவணைப்புமாலும் தான்.

நீ எனக்கு அறிமுகமானது ஒரு நல்ல தோழியாக... அதுமுதல் உன்னோடு பழக்கம். பரஸ்பரம் நம் இருவருக்குமான நட்பின் பகிர்தல்களில் இருவரையும் நன்கறிந்து கொண்டோம். உன்னைப்பற்றிய உன் விம்பத்தை ஓரளவு தெரிந்து வைத்திருப்பவன் நான், எப்போது உன் குரல் உடையும், எப்போது உன் கோபம் விம்மும்,... எந்த நேரம் நீ ஆர்ப்பரிப்பின் களிப்பில் மகிழ் கொள்வாய் எல்லாம் எல்லாம் ஏதோ கொஞ்சமாய் உணர்ந்தவனாக நான் இருப்பது எனக்கு மகிழ்வான விசயமே...!

எனக்குத் தெரியும் நாளைய நாள் உனக்கு மகிழ்ச்சியினைத் தந்ததாய் இருக்காது என்பதும், அதே நேரம் உனக்குள்ளே உறைந்து கிடக்கும் உன் அம்மாவின் நினைவுகளை மீள எழுப்பி பரவசத்தின் பிடியில் உன்னை ஆழ்த்தி கொந்தளிக்க வைக்குமென்பதும் எனக்குத் தெரியும்.

எவ்வளவோ முறை வியந்திருக்கிறேன் நீ எத்தனை தைரியமுடைய பெண் என்பவள் என்பதனிலும் எத்தனை மனிதாபிமானம் மிக்கவள் என்பதனிலும். உனக்கும் எனக்குமான நாத்திக , ஆத்திக விவாதங்களில் நாம் இருவருமே தோற்றதில்லை..

அரசியல்,கலை,இலக்கியம்,ஏன் மருத்துவம் கூட பேசுவேன் . இவையெல்லாவற்றிலும் கரைகடந்தவளானாலும் அமைதியாய் கேட்டுக்கொண்டிருப்பாய் பின்னுன் கருத்துக்களைக்கூற.. எப்படி வாய்த்ததுன் பொறுமை.

எல்லா பிள்ளைகளைப்போலேயும் உன் அன்னை உன்னை வளர்த்தெடுக்கவும் இல்லை என்பதனையும் அறிவேன். இதே நாளில் சில ஆண்டுக்கு முன் அவர் உயிரோடு இருந்திருப்பார்.. இப்போது இல்லை அவர் என்று இந்த ஊர் சொல்லும் வார்த்தையில் உண்மையில்லை... ஆம் நிச்சயமாய் அவர் நீ நட்டுவைத்த மாஞ்செடியின் நிழல் பரப்பி கிளைவிரித்து நாளை உன் வரவுக்காய் காத்துக்கிடக்கிறார்.

உங்கள் இருவருக்குமான அன்பின் தாய்மையின் உறவினை கேட்கும் போதெல்லாம் எனக்குள் பொறாமையுணர்ச்சி மேலெழுந்து உடைவதை தவிர்க்க முயல்வதே இல்லை. நீ கொடுத்து வைத்தவளென்பதால் உனக்கு அப்படி வாய்த்ததில் பிழைகளே இல்லை... ஆனால் இத்தனைச் சீக்கிரம் உனக்கிந்த பிரிவைத் தந்துவிட்டு போனாரென்னும் வருத்தம் எனக்குண்டு.

காயத்ரி உன் உலகத்தில் பிரவேசித்த நண்பனாய்த்தான் இதை எழுதுகிறேன்... துக்கங்கள் ஒருபோதுமுன்னை ஸ்திரப்படுத்தாது. உடைந்தழுவதின் மாற்று உயரப்பறக்கும் உன் மகிழ்வுகளை கொண்டாடுவதிலிருக்கின்றது .. எப்போதும் தன்மகள் கலங்கித்தவிப்பதை அவர் விரும்பி இருக்கமாட்டாரென்றே என் எண்ணம்.

மனம் முழுக்க பாரத்தைச் சுமக்கத்துவங்கியிருப்பதாய் சொல்கிறாய்... அவை பாரமல்ல உனக்குள்ளேயான தாய் தேடும் சேயின் தவிப்பென்பதும் உனக்குத் தெரியும் ஏன் நான் மேலே கூறிய அத்தனையையும் நானா பேசுகிறேனென்ற வியப்பில் கூட இதனை வாசித்துக்கிடப்பாய் என்பதுமெனக்குத் தெரியும்...

எனக்கென்னம்மோ உங்கம்மா உன்னோட ரூபத்தில் தான் இருக்காங்கன்னு பல நேரம் தோணும். ஏதோ சொல்லனும்ன்னு தோணூச்சு சொல்லிட்டேன்.,.. வரட்டுமா! “
...................................................................................................................................................

பாத்தீங்களா, படபடன்னு கொட்டி தீத்துட்டு வரட்டுமான்னு கிளம்பிட்டார். புரிஞ்சுக்குற மாதிரி ஒரு நல்ல தோழமையோட தோள் கிடச்சா அப்புறம் நமக்கு வேற என்னங்க கவலை??????

கவலை எல்லாம் மறந்தாச்சு. அம்மாவ பாக்கவும் கிளம்பியாச்சு. என்னது அம்மாவையா? னு கேக்குறவங்களுக்கு...... ஆமா, அம்மாவ தான். எப்படின்னு வந்து சொல்றேன். இப்போ பை பை...

27 comments:

  1. புரிஞ்சுக்குற மாதிரி ஒரு நல்ல தோழமையோட தோள் கிடச்சா அப்புறம் நமக்கு வேற என்னங்க கவலை??????//

    no kavalai athutan unga pathivu solluthe..

    கவலை எல்லாம் மறந்தாச்சு. அம்மாவ பாக்கவும் கிளம்பியாச்சு. என்னது அம்மாவையா? னு கேக்குறவங்களுக்கு...... ஆமா, அம்மாவ தான். எப்படின்னு வந்து சொல்றேன். இப்போ பை பை...///

    hmm ok akka...

    ReplyDelete
    Replies
    1. :) தேங்க்ஸ் மகேஷ்

      Delete
  2. கார்த்திக் அவர்கள் அருமையாக சொல்லி உள்ளார்... அவருக்கு பாராட்டுக்கள் பல... இருவருமே கொடுத்து வைத்தவர்கள்... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. ஹஹா தேங்க்ஸ் அண்ணா...

      Delete
  3. அருமையான புரிந்துணர்தல்... வாழ்த்துகள்

    ReplyDelete
    Replies
    1. தேங்க்ஸ் மேடம்...

      Delete
  4. கார்த்திக் கூறிய அந்த புரிதலில் அன்பு பாசம் காதல் நட்பு தாய்மை தோழமை என்று அத்தனை உறவுகளையும் உணர்வுகளையும் காண முடிகிறது, பிரிவால் வாடும் உங்கள் மனம் ஆலமரமாய் கிளை விரிந்த உங்கள் அம்மாவின் அன்பில் அமைதியடையட்டும்

    ReplyDelete
    Replies
    1. அட, தாங்க்ஸ்... அழகா சொல்லிட்டீங்க :)

      Delete
  5. என்னமோ போ...!

    ReplyDelete
  6. புரிஞ்சுக்குற மாதிரி ஒரு நல்ல தோழமையோட தோள் கிடச்சா அப்புறம் நமக்கு வேற என்னங்க கவலை?

    உண்மையான வார்த்தைகள் சரியாச் சொன்னீங்க.

    ReplyDelete
    Replies
    1. அதானே, நமக்கு வேற என்னங்க கவலை?

      Delete
  7. வணக்கம்
    அம்மா மடி தேடி என்ற பதிவில் மிக அழகான கருத்தை பதிவிட்டிர்கள் பதிவு அருமை வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கு தேங்க்ஸ் :)

      Delete
  8. மிக அருமையான ஆறுதல் வார்த்தைகள்! உங்கள் நட்பு சிறக்கட்டும்! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. உங்க வாழ்த்துக்கு தாங்க்ஸ் :)

      Delete
  9. இங்கயும் வந்துட்டேன் காயத்திரி... அருமையா இருக்கு உங்க பதிவுகள்

    ReplyDelete
  10. புரிஞ்சிடுச்சு உங்களைப் புரிந்த உங்கள் நண்பனின் வார்த்தையால் உங்களை நீங்களே பார்க்க கிளம்பிட்டீங்க...

    ReplyDelete
    Replies
    1. :) ஆமான்னு தான் நினைக்குறேன் :)

      Delete
  11. அற்புதம். இங்கே எனது முதல் வருகை.....

    அழகாய்ச் சொல்லி இருக்கிறார் கார்த்திக். பாராட்டுகள்.

    வலைச்சர ஆசிரியர் பணிக்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு தேங்க்ஸ்.... பாராட்டுக்கும் தாங்க்ஸ்.... கார்த்திக்க பாராட்டுனதுக்கும் தேங்க்ஸ் :)

      Delete
  12. ///எப்போதும் தன்மகள் கலங்கித்தவிப்பதை அவர் விரும்பி இருக்கமாட்டாரென்றே என் எண்ணம்./// வரிகள் அனைத்தும் உணஉண்மை சகோதரி ஒரு தாய் தன் மகளை மேலே உயர உயரப் பறப்பதைப் பார்பதற்கே விரும்புவாள்...நீ வாழ்வில் உயர வாழ்த்துக்கள் :)

    ReplyDelete
    Replies
    1. ம்ம்ம்ம் தேங்க்ஸ் அண்ணா

      Delete
  13. சூப்பரா சொல்லியிருக்கார் கார்த்திக்..

    ReplyDelete
  14. உங்களை வலைச்சரத்தில் அறிமுகம் செய்து இருக்கிறேன். நேரம் இருக்கும் போது வந்து பார்த்தி விட்டு கருத்திடுங்கள் சகோ

    http://blogintamil.blogspot.com/2015/02/blog-post_3.html

    ReplyDelete
  15. அன்புமிகு வலைப் பூ அன்பருக்கு,
    நல்வணக்கம்!
    திருமதி R.உமையாள் காயத்ரி அவர்களின்
    "உள்ளம் சொல்லுமே அம்மா…. அம்மா…அம்மா…!!!"
    இன்றைய வலைச் சரத்தின்
    சிறப்புமிகு பதிவாளராக தாங்கள் தேர்வாகி,
    வலம் வந்தது கண்டு மிக்க மகிழ்ச்சி!

    வாழ்த்துகளுடன்,
    புதுவை வேலு
    www.kuzhalinnisai.blogspot.com
    (எனது இன்றைய பதிவு "அவன் ஒரு குடையைத் தேடி" (சிறு கதை)
    படித்திட வேண்டுகிறேன்.)

    ReplyDelete