Monday 7 October 2013

வீட்ல யாரும் இல்லப்பா...... லொள்ளு பாட்டி


ஒரு அழகான காடு... லேசா மழை தூறல்... ஒரு பட்டாம்பூச்சி ஜாலியா நனஞ்சுகிட்டே ஒவ்வொரு பூவா போய் உக்காந்து பொறுமையா அதோட அழக ரசிச்சுட்டே தேன் குடிக்குது. அப்புறம் அதுக்கு வயிறு நிறைஞ்சதும் போய் தூங்கலாம்னு தற்காலிகமா அதோட கூட்டுப் புழு வாழ்க்கைக்கு திரும்பிடுச்சு.
ஆழ்ந்த உறக்கம், கவலை மறந்த இரவு, தூக்கம்னா தூக்கம் அப்படி ஒரு தூக்கம். திடீர்னு ஒரு அலாரம்... வேக் அப் வேக் அப் னு... பதறி அடிச்சு சோம்பலா சிறக விரிச்சுட்டே பாத்தா நீங்க தான் முன்னாடி நின்னுட்டு இருக்கீங்க... எதுக்கு இப்போ இவ்வளவு அவசரம், இப்படியா பட்டாம்பூச்சிய எழுப்பி விடுறது????? சரி சரி, எதோ தெரியாம எழுப்பி விட்டுட்டீங்க, நானும் உங்களுக்கு ஒரு குட் மார்னிங்க வச்சுக்குறேன்...

அப்புறம் வேற என்ன விசேஷம்? ஊருல மழை இருக்கா? ஆடு மாடு எல்லாம் சௌக்கியமா? ஊருக்கு கிழக்கால ஒரு ஆலமரம் இருந்துச்சே அது இன்னும் அங்க தான் இருக்கா, இல்ல சர்காருல வெட்டிகிட்டு போயிட்டாங்களா? ஊருக்கு போன உடனே மறக்காம கடிதாசி போடுங்க அப்படினு லெட்டர் எழுதுன காலம் போய் ஊருக்கு ட்ரங்க்கால் போட்டு பேசுன ஒரு காலமும் வந்துச்சாம்.

நாம எல்லாம் இப்போ டச் ஸ்க்ரீன்ல டச் பண்ணிக்கிட்டே நொச்சு நொச்சுனு பேசிகிட்டு இருக்கோம், ஆனா போன் சாரி சாரி இந்த டெலிபோன் வந்த காலத்துல அத எல்லாம் நீங்க எவ்வளவு ஆச்சரியமா பாத்துருப்பீங்க? அப்படி தாங்க எங்க பாட்டியும் பாத்ருக்காங்க... (நான் அப்போ பொறக்கவே இல்லன்னு அம்மா தான் சொன்னாங்க)

வீட்ல அப்போ தான் போன் வந்த நேரமாம். போன் வந்தா அம்மா எடுத்து பேசுவாங்களாம். என் பாட்டி ஓயாம பேசிட்டே இருக்குற டைப். இதுனாலே ஊர்ல பாதி பேருக்கு எங்க வீட்டுக்கு வர்றதுனா ஒரு பயம். ஒரு நாளு அம்மா அவசரமா பக்கத்து வீட்டுல ஒருத்தங்க பிரசவம்னு ஹெல்ப் பண்ண போய்ட்டாங்களாம்.

எல்லாம் முடிஞ்சு வீட்டுக்கு வர லேட் ஆக போன் அடிச்சிருக்கு. அம்மா ஓடி வந்து போன் எடுக்குறதுக்குள்ள பாட்டி, அத தொடாத, எவனோ ஒருத்தன் நான் சொல்ல சொல்ல கேக்காம மறுபடி மறுபடி கூப்ட்டுட்டு இருக்கான். அந்த பயலுக்கு இவ்வளவு இருந்தா எனக்கு எவ்வளவு இருக்கும்னு சொல்லிட்டே ஒரு பெரிய கம்பு எடுத்து போன்ன கீழ போட்டு உடைச்சுட்டாங்களாம்.

அம்மா தலைல கைய வச்சுட்டே என்ன நடந்ததுன்னு விசாரிச்சுருக்காங்க. ஒரு தடவ அடிச்சான் மக்கா, நான் நீ வீட்ல இல்லன்னு சொன்னேன் வச்சுட்டான், மறுபடியும் அடிச்சான், லே... அவ வெளில போயிருக்காலேனு சொன்னேன், வச்சுட்டான், மறுபடியும் அடிச்சான். சொன்னா கேக்க மாட்டியாலே... உனக்கு அவ்வளவு திமிரானு கம்பெடுத்துட்டு பக்கத்துல போனேன், பயந்து போய் வச்சுட்டான். அதோட விட்டுருக்கணும், எவ்வளவு திமிரு இருந்தா மறுபடியும் கூப்பிடுவான், அதான் ஒரே போடு... இனி கூப்பிட மாட்டான்ல..னு பெருமையா அம்மாவ ஒரு பார்வை வேற பாத்ருக்காங்க.... ஹஹா இதுல காமடி என்னனா ஒரு தடவ கூட பாட்டி போனை அட்டென்ட் பண்ணவே இல்லையாம்...

பின் குறிப்பு: அவசர அவசரமா வெளியூர் போறதால நாளு நாள் வீட்டுக்கு வர மாட்டேன்னு சொல்ல அப்பா தான் கால் பண்ணியிருக்காங்க. இது தெரியாம பாட்டி போனை உடைக்க, என் பையன காணலனு நாலு நாளும் ஊரை வேற கூட்டி ஒப்பாரி வச்சிருக்காங்க அவ்வ்வ்வ்வ்வ்

அப்புறம், இன்னும் என்ன சிரிப்பு? அப்படியே தமிழ்மணத்துல எனக்கு ஒரு ஓட்டு போட்டுட்டு அப்படியே கீழ கமண்ட்டும் போட்டுட்டு போங்க... நான் காலேஜ் வந்து பாக்குறேன்....

நான் சரியா தானே பேசுறேன் 

14 comments:

  1. ஹா... ஹா... பாட்டி செய்தது சரி தான்...!!!

    ReplyDelete
    Replies
    1. அண்ணா, என்ன இது, நீங்களும் பாட்டிக்கு சப்போர்ட் பண்றீங்க அவ்வ்வ்வ்

      Delete
  2. ஃப்ரிட்ஜ், வாஷிங்க்மெஷின், கலர்டிவிலாம் என் பாட்டிக்கிட்ட மாட்டி சிக்கி சீரழிஞ்சு இருக்கு!!

    ReplyDelete
    Replies
    1. ஹைய்யோ எங்க வீட்ல நான் ஸ்டிக் தவா வெள்ளையான கதை எல்லாம் கொடும கொடும

      Delete
  3. // நான் சரியா தானே பேசுறேன் //

    நாங்க சரியாத்தான் கமெண்ட்டு போடுறமான்னு சொல்லுங்க...

    ReplyDelete
    Replies
    1. நீங்க நிறைய கமன்ட் போடுங்க, அப்புறமா சொல்றேன்

      Delete
  4. Replies
    1. இந்த சிரிப்பு, எங்க பாட்டிக்கா, அத பீல் பண்ணி புலம்பின எனக்கா?

      Delete
  5. Replies
    1. என்ன சிரிப்பு மகேஷ், நான் சரியா தானே பேசுறேன்?

      Delete
  6. சூப்பர் காமெடி

    ReplyDelete
  7. ஆஹா பாட்டி you are create

    ReplyDelete